செய்வே னென்றுஆக்கிநேயாஸ்திரத்தை எடுத்துத்தொடுத்து விடுக்கத் தொடங்கினமாத்திரத்தில், மிக வெப்பங்கொண்டவனாய்வருணன் அஞ்சி நடுங்கி ஓடிவந்து அவரைச் சரணமடைந்து அணைகட்டுதற்குஉடன்பட்டா னென்பது, ஸ்ரீ ராமாயண கதை. (254) 79. | தசையும்வெம்பிணமுந்துன்றத் தனித்தனிப்பெருகியெல்லாத், திசைதொறுங்குருதிநீத்தந் திரைக்கடற்சென்றுமண்ட, அசைவிலாவவுணர்மீண்டு மந்தரத்தொளித்துநின்று, விசையவில்விசயன்றன்மேல்வெகுண்டுவெம்படைகள் விட்டார். |
(இ-ள்.)(அந்த அஸ்திரத்தினால்),தசைஉம் - சதைகளும், வெம்பிணம்உம் - பயங்கரமானபிணங்களும், துன்ற - (எங்கும்) நிறைய, குருதி நீத்தம் - இரத்தவெள்ளம், எல்லாம் திசைதொறுஉம் - திக்குக்களெல்லாவற்றிலும், தனி தனி பெருகி - தனியே தனியே வழிந்தோடி, திரை கடல் சென்று மண்ட - அலைகளையுடையகடல்களிலே போய்ச்சேர, (அதன் பின்பு), அசைவு இலா அவுணர்-(அழிந்தவர்போக) அழிதலில்லாத அசுரர்கள், மீண்டுஉம்-மறுபடியும், அந்தரத்து ஒளித்து நின்று - (மாயையினால்)ஆகாயத்திலே மறைந்து நின்று, விசையம் வில் விசயன் தன்மேல்-வெற்றியைத் தருகின்ற வில்லையுடையஅருச்சுனன்மேலே, வெகுண்டு - கோபித்து, வெம் படைகள் விட்டார்-கொடிய ஆயுதங்களை எறிந்தார்கள்;(எ-று.) (255) 80. | விட்டவெம்படைகளெல்லாம் விண்ணிடைச்சுண்ணமாகக் கட்டழகுடையவீரன் மகேந்திரக்கணையால்வீக்க எட்டுணைப்பொழுதில்வஞ்சரெழியின்படைமேல்வீச வட்டவார்சிலையினானுமண்டழற்படையான்மாற்ற. | இதுவும், மேற்கவியும்-குளகம். (இ-ள்.)விட்ட வெம் படைகள் எல்லாம் - வீசிய கொடிய ஆயுதங்கள் யாவும், விண்ணிடை-ஆகாயத்தில்தானே [தன்மேல்விழுதற்கு முந்தியே], சுண்ணம் ஆக - பொடியாய்ப் போம்படி, கட்டு அழகு உடைய வீரன்- மிகுந்த அழகையுடைய அருச்சுனன், மகேந்திரன் கணையால்-சிறந்த இந்திரனைத்தெய்வமாகவுடைய மகேந்திராஸ்திரத்தால், வீக்க-அழிக்க,- வஞ்சர் -வஞ்சனையுள்ளஅசுரர்கள், எள் துணைபொழுதில்- எள்ளளவுகாலத்தில் [கணப்பொழுதினுள்ளே],எழிலியின் படை மேல் வீச- (வருணணைத்தெய்வமாகவுடைய) மேகாஸ்திரத்தைப் பிரயோகிக்க, வட்டம் வார் சிலையினான்உம்- வட்டவடிவமாக வளைந்தநீண்ட வில்லையுடைய அருச்சுனனும், மண்டு அழல் படையால் - பற்றியெரிகின்ற அக்கினியைத் தெய்வமாகவுடைய ஆக்நேயாஸ்திரத்தால், மாற்ற - (அதனை)விலக்க,-(எ- று.)-'ஏவ'என மேலிற்கவியில்தொடரும். என் - மிக்கசிறுமைக்கு எடுத்துக் காட்டுவதொரு அளவை. |