111.-மாதலியின்சொற்கேட்ட அருச்சுனன் அவரை முடித்த பின்பேஅமராவதி செல்வேனென்று வஞ்சினங் கூறல். தன்றேர்வலவன்மொழிகேட்டுத் தயங்குநீலக் குன்றேயனையான்கொடும்போர்வஞ்சினங்கள்கூறி இன்றேயிவராவியுந்தென்புலத் தேற்றிப்பின்னர் அன்றேயினிநானமராவதி செல்வதென்றான். |
(இ - ள்.)தன் தேர் வலவன் மொழி கேட்டு - (இங்ஙனம்) தனது தேர்ப்பாகனாகியமாதலி சொன்ன வார்த்தையைச் செவியுற்று, தயங்கு நீலம் குன்றுஏ அனையான்- விளங்குகின்ற நீலநிறமுள்ள மலையையேயொத்த அருச்சுனன், கொடு போர் வஞ்சினங்கள் கூறி - கொடிய யுத்தத்துக்கு உரிய பல சபதங்களைச்சொல்லி,'இன்றுஏ-இப்பொழுதே,இவர் ஆவிஉம்- இவ்வசுரர்களது உயிரையும், தென் புலத்து ஏற்றி-தென்திசையிலுள்ள யமலோகத்திற் சேரச்செய்துவிட்டு, பின்னர் அன்றுஏ-பின்பன்றோ,இனி-, நான்-, அமராவதி - சுவர்க்கலோகத்துள்ள நகரத்துக்கு, செல்வது - போவது',என்றான்- என்று பிரதிஜ்ஞை செய்தான்;(எ-று.) அமராவதி -அமரர்களையுடையதுஎனத் தேவேந்திரனது இராசதானிக்குக் காரணக்குறி. (287) 112.-அருச்சுனன்அந்நகர்மீது தேரை யேவுக என்ன, மாதலி அங்ஙனேசெய்தல். இந்தப்புரத்தின்மிசைத்தேரினையேவுகென்னாக் கந்தற்குவமைதகுதிண்டிறற் காளைகூறச் சிந்தைக்குமுந்துந்தடந்தேரைத் தனுசர்வைகும் அந்தப்புரத்தில்விடுத்தான்மற் றவனுமாதோ. |
(இ - ள்.)'இந்தபுரத்தின்மிசை - இந்நகரத்தின் மேலே, தேரினை ஏவுக - தேரைச் செலுத்துவாயாக,' என்னா- என்று, கந்தற்கு உவமை தகு திண் திறல் காளை- (எல்லா வீரர்களுக்கும் உபமானமாகச் சொல்லப்படுகிற) முருகக்கடவுளுக்கும் உபமானமாகத்தக்க மிக்க வலிமையையுடைய வீரனானஅருச்சுனன், கூற-சொல்ல,-அவன்உம்- மாதலியும், சிந்தைக்குஉம் முந்தும் தட தேரை - மனத்தினும் விரைந்து செல்லுந் தன்மையுடைய பெரிய இரதத்தை, தனுசர் வைகும் அந்த புரத்தில் - அசுரர்கள் வசிக்கின்ற அவ்விரணியபுரத்திலே, விடுத்தான்-செலுத்தினான்; (எ-று.) கந்தன்=ஸ்கந்தன். உபமேயத்தினும் உபமானம் சிறந்திருத்தல்வேண்டு மென்பது அலங்கார நூலாரது துணிபாதலால், அருச்சுனனது சிறப்புத் தோன்ற, 'கந்தற்குவமைதகுதிண்டிறற்காளை'என்றார். காளை- உவமவாகுபெயர். நினைத்தமாத்திரத்தில் எவ்வளவு தூரத்திலுள்ள பொருளினிடத்துஞ் சென்று சேரு |