பக்கம் எண் :

24பாரதம்ஆரணிய பருவம்

கொண்டும், கிராதர் போர் முழக்கம் கேட்டுஉம் - வேடர்களது
போரிலுண்டாகின்றதொனியைச் செவியுற்றும், எரி கிளர் முழுக்கம் கேட்டுஉம்
- காட்டுத்தீப் பற்றியெரிகின்ற ஆரவாரத்தைப் கேட்டுக் கொண்டும், -
(அருச்சுனன் வழிநடந்து), எம்பிரான் - யாவர்க்குந் தலைவராகிய
சிவபெருமான், இமவான் தந்த புரி குழலோடுஉம் - இமவத்பருவதம் பெற்ற
கட்டிய கூந்தலையுடைய உமாதேவியுடனே, வைகும்-எழுந்தருளியிருக்கின்ற,
புண்ணியம் பொருப்பை - நல்வினையையுடைய ஸ்ரீகைலாசகிரியை,
சேர்ந்தான் - அடைந்தான்; (எ-று.)

     கைலாசத்துக்குப் புண்ணியம்-சிவபெருமான் தன்னிடம்
எழுந்தருளியிருத்தற்கு ஏற்ற பாக்கியம். இனி, புண்ணியம் பொருப்பு-
புண்ணியவடிவமான மலையுமாம்; புண்ணியத்தை வெண்ணிறமுடையதாக
வருணித்தல் கவிசமயம்.  கிரிகளின் முழக்கம்-மலையிற்றோன்றும் எதிரொலி.
                                                          (33)

34.-அருச்சுனன் ஆங்கிருக்குந் தவசியர்சொற்படியே
தவவிரதம் பூணுதல்.

கைம்மலையுரிவையோடு கட்செவிக்கச்சுஞ்சாத்துஞ்
செம்மலைவிழியிற்காணான் சிந்தையாற்கண்டுபோற்றி
அம்மலைச்சாரறோறு மருந்தவம்புரிநர்கூற
விம்மலைநீங்கியாங்கண் மெய்த்தவவிரதனானான்.

     (இ-ள்.) (அருச்சுனன்),-கைம்மலை உரிவையோடு-யானைத்தோலுடனே,
கட்செவி கச்சுஉம்-நாகமாகிய கச்சினையும், சாத்தும்-தரித்துள்ள, செம்மலை-
சிவபெருமானை, விழியின் காணான்-புறக்கண்களாற் பாராதவனாய்,
சிந்தையால் கண்டு-நெஞ்சென்னும் அகக்கண்ணில் தரிசித்து, போற்றி-
துதித்து,-அ மலை சாரல் தோறுஉம் அரு தவம் புரிநர் கூற விம்மலை
நீங்கி-அந்தமலையின் பக்கங்களிலெல்லாம் (இருந்து பிறராற் செய்வதற்கு)
அருமையான தவத்தைச் செய்கின்றவர்கள் (சமாதானஞ்) சொல்லியதனால்
(கடவுளைப் பிரதியக்ஷமாகக் காணாமையாலாகிய) துன்பத்தை ஒழிந்து,-
ஆங்கண் - அவ்விடத்தில், மெய் தவம் விரதன் ஆனான் - உண்மையான
தவத்திற்குஉரிய விரதங்களை அநுஷ்டிப்பவனானான்; (எ-று.)

     விழியிற் காணான் தவம்புரிநர்கூற விம்மலைநீங்கிச் சிந்தையாற் கண்டு
போற்றித் தவவிரதனானா னென்க.  கையையுடைய மலையெனவே,
யானையாயிற்று: அடையடுத்த உவமவாகுபெயர்.  கட்செவி - கண்ணையே
செவியாகவுடையது: வேற்றுமைத்தொகை அன்மொழி.  கச்சு-இடைக்கட்டு
என்னும் அணி.

     ஒருகாலத்திற் பரமசிவன் தன்னை மதியாத தாருகாவனத்து
முனிவர்களது மனநிலைமையைப் பரீட்சிக்க எண்ணித் தாம் ஒரு விட
வுருவங்கொண்டு சென்று அவரில்லந்தோறும் பிட்சாடனஞ் செய்து, தம்மை
நோக்கிக் காதல்கொண்ட அம்முனிபத்தினியர்களது கற்புநிலையைக்
கெடச்செய்ய, அதுகண்டு