னங்களைப்பதித்த இரண்டு குண்டலங்கள், இரு புறம் திகழ - இரண்டு பக்கங்களிலும் விளங்க,-விம்பம்மால் வரை மீது - வட்டவடிவமான பெரியதொரு மலையின்மேல்,ஒருமேருஏ ஒக்கும் அம்பொன் மால் வரை இருந்து என - மகாமேருமலையையேபோல்வதொரு அழகிய பொன்மயமான பெரியமலைதங்கியிருந்தாற்போல, அநுமான் இருந்தனன்- அனுமான் வீற்றிருந்தான்;(எ-று.) "காஞ்சநாத்ரிகமநீயவிக்ரஹம்[பொன்மலைபோலழகியதிரு மேனியையுடையவன்]" என்றபடி அநுமான் பொன்மலைபோல்பவனாதலால், மலையின்மேல்அநுமான் இருந்ததற்கு, மால்வரைமீது இருக்கும் மேருவேயொக்கும் மற்றொருமால்வரையை யொத்திருந்த தென இல்பொருளுவமை கூறினார். இங்கே 'எம்பிரான்'என்றது - விஷ்ணுவின் ஏழாவது திருவவதாராமான ஸ்ரீராமனை.திரிவிக்கிரமாவதாரஞ்செய்த திருமாலையொழியவேறெவர்க்குங் கண்ணுக்கெட்டாத குண்டல மென்றும் முன்னிரண்டடிகட்கு உரைக்கலாம்: இங்ஙனங்கொள்ளின், மிக்க ஓங்கிய வடிவுடன் அநுமான் இருந்தானென்க. இவ்வநுமான் குழந்தைப்பருவத்தில் இளஞ்சூரியனைக்கனிந்த பழமென்று கருதிப் பிடிக்கப் பாய்ந்தபொழுது, அதனையறிந்துசினந்த இந்திரனது வச்சிராயுதத்தினாலடிக்கப்பட்டுச் சிதைந்து வீங்கிய கன்னமுடைய னாதலால்,இவனுக்கு ஹநுமானென்று திருநாமம். அனுமான்=ஹநுமாந்: வடசொற்றிரிபு: இதற்குக் கன்னத்தில் வேறுபாடு உடையவன் என்பது பொருள்;ஹநு - கன்னம்:மாந்- வடமொழிப் பெயர் விகுதி. விம்பம்=பிம்பம்:வட்டமென்று பொருள். மேரு வென்பது பொன்மயமான தாய்ப் பூமியின்மத்தியிலுள்ளதொரு மலை. (360) 24.-ஆரவாரஞ்செய்துகொண்டு செல்லும் வீமன் தன் முன்னே அநுமானைக்கண்டு திகைத்து நிற்றல். குகைத்தடங்கிரியனையதோள்கொட்டியார்த்துரப்பி நகைத்துநாகமுநாகமு நடுங்கிடநடந்து மிகைத்தவாளரிபோல்வரும் வீமன்முன்கண்டு திகைத்துநின்றனன்மறமையுந் திறமையுமுடையான். |
(இ-ள்.)குகை-குகைகளையுடைய,தட-பெரிய, கிரி அனைய- மலையையொத்த,தோள்-தோளை,கொட்டி-தட்டி, ஆர்த்து- ஆரவாரஞ்செய்துகொண்டும், உரப்பி-அதட்டிக்கொண்டும், நகைத்து - சிரித்துக்கொண்டே, நாகம்உம் - வானுலகும், நாகம்உம் - பாதாளலோகமும், நடுங்கிட-,மிகைத்த-(வலிமையினால்)மேம்பட்ட, வாள் அரி போல் - கொடிய சிங்கம்போல, நடந்துவரும் - (கம்பீரமாக) நடந்து செல்லுகின்ற, வீமன்-,மறமைஉம் - வீரகுணத்தையும், திறமைஉம் - சாமர்த்தியத்தையும், உடையான் - உடையவனாகியஅநுமானை,முன் - முன்னிடத்திலே, கண்டு - (தான் போகமுடியாமல் குறுக்கிட்டிருப்பதைப்) பார்த்து, திகைத்து நின்றனன்-;(எ-று.) |