பெற்றுக் கொண்டு,புண்டரிகன் பெயர் நாடு பொறித்தோன் - புண்டரீகனென்ற (தன் பெயரை நாட்டில் எழுதிவைத்திருப்பவன்,-திண்திறல் மாருதி சேய் வருவானை- மிக்க வலிமையுடைய வாயுபுத்திரனான வீமசேனன் வருபவனை,கண்டனன்-கண்டு, அங்கு- அப்போது, அழல் கான்றிடு கண்ணான்-நெருப்பைவெளிப்படுத்துகின்ற கண்களையுடையவனாய்,-(எ-று.) மாருதிசேய்-மாருதியென்னப்படுகிற சேய்என்று இருபெயரொட்டு: சேய்என்பது குமாரன் என்ற வடசொல்போலத் தமிழில் வழங்குவது என்க: இது செம்மைநிறமுடைய முருகக்கடவுளைமுதலிற் காட்டி, பிறகு இலக்கணையால்அவன்போல் அழகு வலிமை முதலியனவுள்ள மைந்தனைக் காட்டும். இனி மாருதி-வாயுகுமாரனானவீமன், சேய்வருவானை- சேய்மையில் வருபவனைஎன்றுமாம். கண்டனன்-முற்றெச்சம். கண்ணான் என்பதைக் குறிப்பு முற்றாகமுடித்தலும் ஒன்று. (409) 73.-புண்டரீகனென்றஅவ்வரக்கன் வீமசேனனை நோக்கிக்கூறலுறுதல். உருத்துமுகிற்குல முருமுடன்மட்கச் சிரித்திதழ்கவ்வி யெயிற்றிணைதின்றாங்கு அரித்துவசன்றனைநோக்கியரக்கன் கருத்துடனின்றிவை கட்டுரைசெய்வான். |
(இ-ள்.)முகில் குலம் - மேகங்களின் கூட்டம், உருமுடன்-இடியுடனே, மட்க-மங்கும்படி, உருத்து சிரித்து - சினங்கொண்டு சிரித்து, இதழ் கவ்வி- (பற்களால்) உதட்டைக் கடித்தும், எயிறு இணைதின்று-இரண்டு கோரப்பற்களைமென்றும், ஆங்கு-அப்போது, அரி துவசன் தனைநோக்கி- சிங்கக் கொடியை யுடையவனானவீமசேனனைப்பார்த்து, அரக்கன்-அந்தப் புண்டரீகனென்ற இராட்சதன், நின்று-இருந்தவண்ணம்,கருத்துடன்- மனப்பூர்வமாக, இவை-இவ்வார்த்தைகளை,கட்டுரை செய்வான்-உறுதிச் சொற்களாகக் கூறுபவனானான்;(எ-று.)-புண்டரீகனென்னும்அரக்கன் கூறுவனவற்றை மேற்கவியிற் காண்க. சிரித்தல்இதழ்கவ்வுதல் எயிற்றிணைதின்னுதல்- சினக்குறி. வீமன் தனது பலபராக்கிரமங்கட்கு அறிகுறியாகச் சிங்கத்தைத் துவசத்திற் கொண்டனன்போலும். உட்குடன்மட்க என்று பிரதிபேதம். (410) 74.-புண்டரீகவரக்கன்கூறிய உரை. யானுறைகானக மென்றிமையோரும் தானவர்தாமு மிதற்கிடைசாரார் மானுடனீயிவண் வந்ததுசுவையாம் ஊனிடவோவிஃ துரைத்திடுகென்றான். |
|