(இ - ள்.)'இமையோர்உம்-இமையாக்கண்ணராகியதேவரும், தானவர் தாம்உம் - அசுரர்களும், யான் உறை கானகம் என்று - நான் வசிக்கின்ற காடு என்ற காரணத்தினால்,இதற்குஇடை - இந்தக் காட்டினிடத்தில், சாரார் - சேரமாட்டார்கள்:(அப்படியிருக்க), மானுடன் நீ-மனிதனாகியநீ, இவண் - இந்தக் காட்டினிடத்தே, வந்தது-,-சுவைஆம்-உருசிபொருந்திய, ஊன்- மாமிசத்தை, இடஓ - (எனக்குக்) கொடுப்பதற்குத்தானோ?:இஃது - இந்தக்காரணத்தை, உரைத்திடுக - சொல்வாயாக,'என்றான்- என்றுகூறினான்;(எ - று)-உரைத்திடுகென்றான்-தொகுத்தல். (411) 75.-உன்னுயிரையுண்ணவே வந்தேனென்று வீமன் மாறு கூறுதல். வென்றியரக்கன் விளம்புதல்கேளாக் குன்றனதோள்கள் குலுங்கநகைத்தாங்கு உன்றனதாவியு முண்டிடவந்தேன் என்றனன்முன்ன மிடிம்பனைவென்றோன். |
(இ-ள்.)வென்றி அரக்கன்-வெற்றிபொருந்திய ராட்சதனாகிய புண்டரீகன், விளம்புதல் - கூறியதை, கேளா - கேட்டு,-குன்று அன தோள்கள் குலுங்க நகைத்து - மலையையொத்ததோள்கள் அசையும்படி சிரித்து,-ஆங்கு - அப்போது, 'உன்தனது ஆவி உம் உண்டிடவந்தேன் - உன்னுடைய உயிரையும் உண்ணும் பொருட்டு வந்துள்ளேன்,'என்றனன் - என்று கூறினான்:(யாவனென்னில்),-முன்னம் இடிம்பனைவென்றோன்- முன்பு இடிம்பாசுரனைவென்று ஒழித்தவனாகியவீமசேனன்;(எ - று.) ஆவியும் என்பது- எச்சவும்மை:உன்வலியையொழிப்பதன்றி ஆவியையும் உண்ண என்க:இனி, எச்சப்பொருளோடு உயர்வு சிறப்புப்பொருளது என்றுகொண்டு, முன்னம் இடிம்பனாவியையுண்டதன்றி உன்னாவியையும்என்று பொருள்காணினுமாம். (412) 76.-இரண்டுகவிகள்-வீமன் புண்டரீகன் என்ற இருவரும் பொருதமை கூறும். மற்றதுகூற மறத்தொடரக்கன் உற்றெதிரோடி யுறுக்கியபோதக் கொற்றவனுங்கதை கொண்டுடன்மண்டிப் பற்றினன்வந்தவ னாவிபறிப்பான். |
(இ - ள்.) அதுகூற - அவ்வார்த்தையை (வீமசேனன்) சொல்ல,-மற்று - பின்பு, அரக்கன் - புண்டரீகனென்ற ராட்சதன், மறத்தொடு - வலிமையோடு, உற்று - பொருந்தி, எதிர் ஓடி - (வீமனுக்கு) எதிரே போய்,- உறுக்கிய போது-கோபித்த சமயத்தில்,- அ கொற்றவன்உம் - வெற்றிபொருந்திய அந்த வீமனும்,-கதை கொண்டு - கதாயுதத்தைக் (கையிற்) கொண்டு, வந்தவன் ஆவி பறிப்பான் - எதிர்வந்தவனான புண்டரீகனென்பானுடைய உயிரைக் |