பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்275

கொண்டுஇருபக்கத்திலும்நின்று திருப்பாற்கடலைக்கடைந்தருளின ரென்க.
இவ்வரக்கர் அங்கு அசுரர்க்கு உதவியாய்க் கடைந்தன ரென்ப.  பின்
இரண்டடியால், இக்காவலாளரின் நீண்டஆயுளுடைமையும், மிக்க
வலியுடைமையும் உணர்த்தப்பட்டன.  நீர்-நீர் வடிவமான[திரவரூபமான]
பால்.                                                   (423)

87.மறத்தொடுவஞ்சமான நண்பெனவளர்த்துநாளும்
அறத்தொடுபகைக்குநெஞ்சர் பிலத்தினுமகன்றவாயர்
புறத்தினின்முகத்தர்மார்பிற் புழைமுழைமூக்கரின்ன
திறத்தினர்குஞ்சிச்செந்தீச் சிரத்தினர்வரத்தின்மிக்கோர்.

     (இ-ள்.)மறத்தொடு - பாவத்துடனே, வஞ்சம்-வஞ்சனையையும்,
மானம் - அகங்காரத்தையும், நண்பு என - (தமக்குச்) சினேகமாக, வளர்த்து
- விருத்திசெய்து, நாள்உம்-தினந்தோறும், அறத்தொடு பகைக்கும்-
தருமத்துடனே மாறுகொள்கின்ற, நெஞ்சர்-மனத்தையுடையவர்களும்,
பிலத்தின்உம் அகன்ற வாயர் - பெருங்குகையைக்காட்டிலும் விசாலமான
வாயையுடையவர்களும், புறத்தினில் முகத்தர்-முதுகிலே
முகத்தையுடையவர்களும், மார்பில் புழை முழை மூக்கர் - மார்பிலே
பெருந்துளையையுடையமலைக்குகைபோன்ற மூக்கையுடையவர்களும்,
இன்ன திறத்தினர் - இவை போன்ற பலவகை விகாரங்களை
யுடையவர்களும், குஞ்சி செம் தீ சிரத்தினர்-தலைமயிர்முடியாகியசிவந்த
நெருப்பைத் தலையிலுடையவர்களும்,வரத்தின் மிக்கோர்-சிறந்தவரங்களால்
மிகுந்தவர்களும்;

     மறத்தொடுவஞ்சம் மானம் நண்பென வளர்த்து என்பதற்கு-
அதருமத்தைத் தமக்குப் பெருமையாகவும் வஞ்சனையைத்தமக்குச்
சினேகமாகவும் வளர்த்து என முறைநிரனிறைப்பொருள்கோளாக்கியு
முரைக்கலாம். ஆன நண்பு என எடுத்து - தக்கதுணையெனினுமாம். பிலம் -
பாதாளவழியுமாம்.  மார்பில் மூக்கர் என்க.  குஞ்சி-ஆண்மயிர்.      (424)    

88.கரங்களாயிரத்தர்நண்ணுங் கால்களாயிரத்தர்குஞ்சிச்
சிரங்களாயிரத்தர்பூழைச் செவிகளாயிரத்தர்வென்றி
உரங்களாயிரத்தரூழி தவமுயன்றுரிமைபெற்ற
வரங்களாயிரத்தர்மிக்க மறைகளாயிரத்தர்மன்னோ.

     (இ-ள்.)கரங்கள் ஆயிரத்தர் - ஆயிரங்கைகளையுடையவரும்,
நண்ணும் கால்கள் ஆயிரத்தர்-பொருந்தின ஆயிரங்கால்களையுடையவரும்,
குஞ்சி சிரங்கள் ஆயிரத்தர் - மயிர்முடியையுடைய
ஆயிரந்தலைகளையுடையவரும், பூழை செவிகள் ஆயிரத்தர்-
பெருந்துளையையுடையஆயிரங்காதுகளையுடையவரும், வென்றி உரங்கள்
ஆயிரத்தர் - சயத்தைவிளக்குகின்ற ஆயிரம்மார்புகளையுடையவரும், ஊழி
தவம் முயன்று-நெடுங்காலந் தவத்தை முனைந்துசெய்து,உரிமை பெற்ற-
(தமக்கு) உரியவனாக அடைந்த, வரங்கள் ஆயிரத்தர்-ஆயிரம்வரங்களை
யுடையவரும், மிக்க மறைகள் ஆயிரத்தர் - பயன்