பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்277

நீலம் கொண்டலின்குமுறி ஆர்த்து குறுகிய - அலைகள்மடங்குகின்ற
கடல்நீரை மொண்டு பருகிய நீலநிறமுள்ள காளமேகம்போலக் கர்ச்சித்து
ஆரவாரித்துக்கொண்டு சமீபித்த, கொடிய நீசர்-கொடுந்தன்மையுள்ள
அதமர்களான அவ்வரக்கர்கள், சண்டம் வேகத்தின் எய்தும் - உக்கிரமான
வேகத்துடனே வருகின்ற, சதாகதி தனயன் தன்னை-வாயுகுமாரனான
வீமனை,சூல பாச காலனைகண்டது அன்னார்-சூலாயுதத்தையும்
காலபாசத்தையும் ஏந்திய யமனைக்கண்ட தன்மையை யொத்தவர்களாய்,
கண்டனர்-பார்த்தார்கள்;(எ-று.)

     விரைவில்வீமன் இவ்வரக்கர்க்கு இறுதியை விளைத்தலால்,சூலபாச
காலனைக்கண்டதன்னாரென உவமை கூறினார். கொண்டல்- நீர்கொண்டது
எனக் காரணப்பெயர்.  நீசர் - குணந்தொழில்களில் இழிவுடையோர். 
பாசம் - கயிற்று வடிவான ஓர் நமனாயுதம்;இது, உயிர்களைக்கட்டியிழுத்துக்
கொண்டுபோவது.                                           (427)

91.-வீமனைநோக்கிஅவர்கள் அதட்டிக் கடுமையாகச்
சொல்லிப் பின்னுங்கூறலுறுதல்.

எற்றவென்பாருஞ்சூலத் தெறியவென்பாருமெய்திப்
பற்றவென்பாருமாவி பறிக்கவென்பாரும்யாக்கை
சுற்றவென்பாருஞ்சென்னி துணிக்கவென்பாருமாகி
உற்றனரரக்கர்நூறாயிரருருத்துரைக்கலுற்றார்.

     (இ-ள்.)உற்றனர் அரக்கர் நூறு ஆயிரர்-வந்துநெருங்கினவர்களான
அந்த லட்சம் ராக்ஷசர்கள், எற்ற என்பார்உம்-(இம்மனிதனை)அடிக்க
என்பவர்களும், சூலத்து எறிய என்பார்உம்-சூலாயுதத்தால் வீசி மோதுக
என்பவர்களும், எய்தி பற்ற என்பார்உம் - (அருகிற்) சென்று பிடிக்க
என்பவர்களும், ஆவி பறிக்க என்பார்உம்-உயிரை வாங்குக என்பவர்களும்,
யாக்கை சுற்ற என்பார்உம் - இவனுடம்பைக் கட்டுக என்பவர்களும்,
சென்னி துணிக்க என்பார்உம்-தலையைவெட்டுக என்பவர்களும், ஆகி-
ஆய். உருத்து உரைக்கல் உற்றார்- கோபித்துச் சொல்லத்
தொடங்கினார்கள்;(எ-று.)-அதனை,மேலிற்கவியிற் காண்க.

     எற்ற, எறிய,பற்ற, சுற்ற - அகரவீற்று வியங்கோள்கள். பறிக்க,
துணிக்க - ககரவீற்று வியங்கோள்கள்.                     (428)

92.-வீமனைஅரக்கர்கள் அதட்டி வினாவுதல்.

இந்திரன்முதலாவுள்ள விமையவர்தாமுமிந்தக்
கந்தவான்சோலைகண்ணானோக்கவுங்கருதிநைவார்
வந்ததென்மதியிலாத மானுடாவுன்றனாவி
சிந்துமுன்செப்புகென்னாத்தெழித்தனர்தீயோரெல்லாம்.

     (இ-ள்.)'இந்திரன்முதல் ஆ உள்ள இமையவர்தாம்உம் - இந்திரன்
முதலாகவுள்ள தேவர்களும், இந்த கந்தம் வான் சோலைகண்ணால்
நோக்கஉம் கருதி நைவார் - வாசனையையுடையஉயர்ந்த