பக்கம் எண் :

சடாசுரன்வதைச்சருக்கம்307

     (இ-ள்.)அழுதுஉம்-(தன்னைக்காணாதபொழுதுவிரகதாபத்தாற்)
புலம்பியும், வாள் முறுவல் அரும்பிஉம் - (தன்னைக்கண்டபொழுது)
ஒளியையுடைய புன்சிரிப்பைச் செய்தும், களித்துஉம்-களிப்படைந்தும்,
ஆடிஉம் - ஆநந்தக்கூத்தாடியும்.  பாடிஉம்-(பலவகைக்) கானங்கள்
பாடியும், மகிழ்ந்துஉம் - மகிழ்ச்சியடைந்தும், தொழுதுஉம் - (தன்னை)
வணங்கியும், ஆதரித்தும் - (தன்னை)மிக விரும்பியும், விழுந்துஉம்-
(தேகம்பரவசமாய்க்) கீழ்விழுந்தும், மேல் எழுந்துஉம்-பின்பு எழுந்துநின்றும்,
துதித்திட - (தன்னைத்)தோத்திரஞ் செய்ய, தன் பதம் தருவான் -
(இப்படிப்பட்ட கோபஸ்திரீகள் முதலிய தன்னடியார்களுக்குத்) தனது
திருவடிகளைக்கொடுத்தருளிய கடவுள், (யாரென்னில்),-முசுடர் ஆகி -
(சூரிய சந்திர அக்கினியரென்னும்) மூன்று ஒளிகளின் வடிவமாய்,
ஞாலம்ஆய்-பூமியின் வடிவமாய், விண் ஆய் - ஆகாயத்தின் சொரூபமாய்,
எங்குஉம்-எவ்விடத்துமுள்ள, முழுதும் ஆய் - எல்லாப் பொருள்களின்
உருவமுமாய், மூலம் ஆய் - (இவையெல்லாவற்றிற்கும்) ஆதிகாரணமாய்,
எழுதுஒணாமறைக்குஉம்எட்டஒணாவடிவத்து - எழுதுதற்கரிய
வேதங்களுக்கும் எட்டமுடியாத சொரூபத்தையுடைய, எம்பிரான் - எமது
தலைவனும்,உம்பர் நாயகனே - தேவாதி தேவனுமான ஸ்ரீமகாவிஷ்ணுவே;
(எ-று.)

     இது இந்தச்சருக்கத்தின் கடவுள் வணக்கம்.  கடவுளின் தன்மையைத்
தெளிவாகக் கூறுவதனால்அவ்வாறுள்ள கடவுளைவணங்குவோ மென்றது
புலனாம். களிப்பு - மிக்க ஆநந்தம்.  தன்பதம்-தனது வாழிடமான
பரமபதமென்றுங் கொள்ளலாம்.  பஞ்சபூதங்களுள் முதலதாகிய பிருதிவியை
'ஞாலமாய்'என்றும், ஈற்றதாய ஆகாயத்தை 'விண்ணாய்'என்றும்,
இடையதாகிய அக்கினியை 'முச்சுடராகி'என்றதிற் சேர்த்தும் கூறியதில்,
கூறப்படாத மற்றையிரண்டையும் அடக்குக.  எழுதொணா,எட்டொணா-
செயவெனெச்சத்தின் ஈறு தொகுத்தல்.  ஒணா- ஒன்றாத: மரூஉ.  வேதம்
எழுதாக்கிளவியாய் அநந்தமாயிருத்தலின், எழுதொணாமறை யெனப்பட்டது.
மறைக்கும், உம்மை - எல்லாப்பொருள்களையுமறிந்து உண்மை கூறுகிற
அதன் சிறப்பை விளக்கும்.  தன்பதந்தந்தான் என்று பிரதிபேதம்.

     இதுமுதல் இருபதுகவிகள் - பெரும்பாலும் இரண்டு நான்கு
ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றவை நான்கும் விளச்சீர்களுமாகிய
கழிநெடிலடி நான்கு கொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்.        (477)

2.-இருடியர்பாண்டவரிடம் கொடியமிருகங்களினின்று
அபயம்வேண்டுதல்.

இந்தநீள்வனத்தின்மன்னவரிவ்வாறின்பமுற்றிருந்தவந்நாளில்,
அந்தமாவனத்தின்சூழலிற்பயிலு மருந்தவமுனிவரர்பலருந்,
தந்திபேருழுவையாளியெண் கிவற்றாற்
                         றாமிடருழந்துமெய்தளர்ந்து,
வந்துமாமகிபர்க்கபயமென்றவர் வாழ் வனத்திடைப்
                                புகுந்துமன்னினரால்.