பக்கம் எண் :

சடாசுரன்வதைச்சருக்கம்309

                                             றேவி,
அறத்தினதுருவாயகண்டமும்புரக்கு மரசனாங்கிருந்துழிவந்து,
புறத்தொருநிருதன்புகுந்தவஞ்சனையும்புரிந்ததும்புகலலாமளவோ.

     (இ-ள்.)அறத்தினது உரு ஆய் - தருமதேவதையினது சொரூபமாய்,
அகண்டம்உம் புரக்கும் - உலகமுழுவதையுங் காக்கவல்ல, அரசன் -
யுதிட்டிரராசன், தொழுது-வணங்கி, மறத்துடன் முன் நின்ற வாயுவின்
மதலையைநோக்கி - (தன்னைக்)கைகூப்பி நமஸ்கரித்துப் பராக்கிரமத்துடனே
எதிரிலேநின்ற வாயுகுமாரனானவீமனைப்பார்த்து, ஐய நீ சென்று திறம்தகு
முனிவர் இடுக்கண் தீர்த்திடுக என்றுஏவி -'ஐயனே! நீ போய்ப் பெருமை
பொருந்தின முனிவர்களது துன்பத்தைத் தீர்த்திடுவாய்' என்று நியமித்து
(அவனையனுப்பிவிட்டு), ஆங்கு இருந்த உழி - அவ்வனத்திலே வசித்திருந்த
பொழுது,-புறத்துஒரு நிருதன் வந்து புகுந்த - வெளியிலிருந்து ஓரரக்கன் வந்து
பிரவேசித்த, வஞ்சனையும்-,புரிந்ததுஉம் - (அவன்) செய்தசெயலும்,
புகலல்ஆம் அளவுஓ-(நம்மாற்) சொல்லுதற்குக்கூடின அளவையுடையதோ?
[அன்றென்றபடி];-

     ஆயினுஞ்சிறிதுசொல்லுவே னெனக் கவி ஒருவாறு அவையடக்கங்
கூறியவாறாம்.                                            (480)

5.-இரண்டுகவிகள்- சடாசுரன் வருணனை.

தோளிரண்டினுநாடொறுமிரண்டந்தண் சுரும்பிணை
                            விரும்பினன்சுமந்து,
தாளிரண்டுடையதொருகருங்குன்றஞ் சரிப்பபோலகண்ட
                                முஞ்சரிப்பான்,
கோளிரண்டஞ்சிப்பிறையிரண்டகல்வான் குகை
                          யிடைப்புகுவதேபோல,
வாளிரண்டன்னவெயிறிரண்டொளிகூர்
                       வாணிலாவழங்கியவாயான்.

இதுமுதல் மூன்றுகவிகள்-குளகம்.

     (இ-ள்.)நாள்தொறும்-தினந்தோறும், தோள் இரண்டின்உம் - (தனது)
தோள்களிரண்டிலும், இணைஅம் தண் இரண்டு சுரும்பு-(ஒன்றோடொன்று)
ஒத்த அழகிய குளிர்ந்த இரண்டு மலைகளை,விரும்பினன் சுமந்து -
விருப்பத்தோடு எடுத்து, தாள் இரண்டு உடையது ஒரு கரு குன்றம்
சரிப்பதுபோல்-இரண்டுகால்களையுடையஒரு கரிய [பெரிய]மலை
சஞ்சரிப்பது போல, அகண்டம்உம் சரிப்பான்-உலகமுழுவதிலுஞ் சஞ்சரிக்குந்
தன்மையுள்ளவனும், கோள் இரண்டு அஞ்சி-(ராகுகேதுக்களென்னும்)
இரண்டு கிரகங்களுக்குப் பயந்து, பிறை இரண்டு-இரண்டு பிறைச்சந்திரர்,
அகல் வான் குகையிடை புகுவதுபோல-பரந்த ஆகாயத்திலளாவியதொரு
மலைக்குகையினிடத்தேபிரவேசிப்பதுபோல, வாள் இரண்டு அன்ன எயிறு
இரண்டு - இரண்டு வாளாயுதத்தைப் போன்ற [கூர்மையையுடைய]
கோரதந்தங்கள் இரண்டு, ஒளி கூர் வாள் நிலா வழங்கிய - பிரகாசம்மிக்க
ஒள்ளிய சந்திரகாந்தி போன்ற வெண்ணிறக் காந்தியை வீசுதற்கிடமான,
வாயான் - வாயையுடையவனும்,-(எ-று.)-சரிப்பான்,வாயான் என்பவை -