பக்கம் எண் :

சடாசுரன்வதைச்சருக்கம்313

     தாரம் - தாரா:என்னும் வடசொற்றிரிபு. அலாது - எதிர் மறைக்குறிப்பு
வினையாலணையும்பெயர்;ஆ - சாரியை. நினையாய். எதிர்மறை
முற்றெச்சமாய், நினைக்காமலென்றுமாம்.                          (485)

10.-அப்போதுமறையவரிடுக்கண் தீர்த்து மீண்டுவரும்
வீமன் நிகழ்வதுகாணுதல்.

என்றிவாறுரைத்துச்சரத்தின்மாமாரி யிருவரும்விரைவுடனேவக்,
கன்றிவாளரக்கன்கனமெனவதிர்ந்து கண்சிவந்துருத்
                                    தெழுமெல்லை,
ஒன்றிவாழ்மறையோரருந்துயரொழித்தாங்
                    கொருநொடிப்போழ்தி னின்மீளும்,
வென்றிவாள்வீமனுற்றதும்நிருதன் வெகுள்வதும்விசும்
                                  பிடைக்கண்டான்.

     (இ-ள்.) என்றுஇ ஆறு உரைத்து-என்று இந்தப்படி சொல்லி,
இருவர்உம்-(நகுல சகதேவர்) இரண்டுபேரும், சரத்தின் மா மாரி-மிக்க பாண
வருஷத்தை, விரைவுடன் ஏவ-துரிதமாகப் பிரயோகிக்க,-வாள் அரக்கன் -
வாள்போலுங் கொடிய அச்சடாசுரன், கன்றி-மனம்வெதும்பி, கனம் என
அதிர்ந்து-மேகம்போலக் கர்ச்சித்து, கண் சிவந்து உருத்து - கண்கள்
சிவந்து கோபித்து, எழும் எல்லை- (போருக்கு மேல்) எழுகிறவளவில்,-
ஒன்றி வாழ் மறையோர் அரு துயர் ஒழித்து - (அவ்வனத்திற்) பொருந்தி
வாழ்கிற முனிவர்களது (கொடுவிலங்குகளாலாகிய ஒழித்தற்கு) அரிய
துன்பத்தை ஒழியச்செய்து, ஆங்கு ஒரு நொடிபோழ்தினில்மீளும்-
அவ்விடத்தினின்று ஒருமாத்திரைப் பொழுதினுள்ளே மீண்டும் வருகிற,
வென்றி வாள் வீமன்-வெற்றியைத் தருகிற ஆயுதத்தையேந்திய வீமசேனன்,-
உற்றதுஉம்-நேர்ந்த செய்தியையும், விசும்பிடை நிருதன் வெகுள்வதுஉம் -
ஆகாயத்திலே அரக்கன் கோபிப்பதையும், கண்டான் - பார்த்தான்;
(எ -று.)                                             (486)

11.-வீமன் சினந்துசடாசுரன்மேல் நெருங்கிச் செல்லுதல்.

கண்டனனிரண்டுகண்களுங்கருத்துங் கனன்றுசெந்தீச்சுடர்
                                        காலக்,
கொண்டவெஞ்சினத்தீக்கதுவியெண்டிசையுங் குலைகுலைந்
                          துடன்வெரூஉக்கொள்ள,
அண்டமுங்குலுங்கநகைத்தெதிர்ந்துரப்பி
                   யார்த்தனனழன்றுதோள்கொட்டி,
மண்டிமேனடந்தானுகாந்தகாலத்துமருத்தெனமருத்தின்
                                    மாமைந்தன்.

     (இ-ள்.)மருத்தின் மா மைந்தன் - வாயுவினது சிறந்தகுமாரனான
வீமன்,-கண்டனன் - (அவற்றைப்) பார்த்து, இரண்டு கண்கள்உம்
கருத்தும்உம் கனன்று செம் தீ சுடர் கால - (தனது) கண்களிரண்டும்
மனமும் எரிந்து சிவந்த அக்கினிச்சுவாலையையுமிழும்படி, கொண்ட வெம்
சினம் தீ கதுவி - (தான்) கொண்ட கொடிய கோபாக்கினி மூண்டு, எண்
திசைஉம் குலைகுலைந்துஉடன்வெரூஉ கொள்ள-எட்டுத்
திக்குக்களிலுமுள்ள பிராணிகளெல்லாம் நடு நடுங்கி ஒருங்கு
அச்சத்தையடையவும், அண்டம்உம் குலுங்க-அண்ட கோளங்களும்
அதிரவும், நகைத்து-பெருஞ்சிரிப்புச்சிரித்து, எதிர்ந்து - (அவ்வரக்கனுக்கு)
எதிர்சென்று, உரப்பி - அதட்டி,