பொருளில் வருதலை"சிகைகடந்தவூடலில்"என்று பரிபாடலிலுங் காணலாம். ஒருபொருளைஒருத்தன் விலைக்குக்கொடுக்கும் போது அவர்கொள்ளும் அளவு பண்டம் கொடுத்தபின் மற்றும் சிறிது கொடுப்பது உண்டு. அது பிசிர் என்று வழங்கப்படும். சிகை என்பது இங்கு அப்பொருளில் வந்ததென்னலாம். இனி, ஒருசாரார் கொழுந்து என்று பொருள் கூறுவர்:அன்றி, அனற்கொழுந்து [அக்கினிச்சுவாலை]:இங்கே, நுனி யெனினுமாம். இனி, சிகை உனது-சடைமுடியையுடைய உன்னுடைய என்றுமாம். (488) 13.-எட்டுக்கவிகள்- இருவர்க்கும் போர்நிகழ, வீமன் சடாசுரனையழித்தமை கூறும். நெடும்பணைப்பொருவின்மராமரமொன்று நெறியிடைநேர்ந்ததங் கதனைப், பிடுங்கினன்விசும்பிலெறிந்தவன்றன்னைப்பிளந்தனன்பிளந் தவப்பொழுதில், அடும்படைத்தடக்கையரக்கனுந்திருகி யணங்கை விட்டக்கணத்தழன்று, படும்பணைக்குன்றமொன்றுவேரோடும்பறித்த வன்மேற்படவெறிந்தான். |
(இ-ள்.) நெடுபணைபொருவு இல் மராமரம் ஒன்று-நீண்ட கிளைகளையுடையஒப்பில்லாத ஒரு ஆச்சாமரம், நெறியிடை நேர்ந்தது- வழியிலே யெதிர்ப்பட்டதாக, அங்கு அதனைபிடுங்கினன்- அவ்விடத்திலுள்ள அம்மரத்தை (வீமன் வேரோடு) பறித்தெடுத்து, விசும்பில் எறிந்து - ஆகாயத்தில் வீசி, அவன்தன்னைபிளந்தனன் - அச்சடாசுரனை (உடம்புபிளக்க) அடித்தான்:பிளந்த அ பொழுதில்-அங்ஙனம் அடித்த அந்தப்பொழுதிலே, அடும் படை தட கை அரக்கன்உம் - கொல்லுந் தன்மையுள்ள ஆயுதத்தையேந்தவல்ல பெரிய கைகளையுடைய அவ்விராக்கதனும், திருகி-மனம் மாறுபட்டு, அணங்கை விட்டு - திரௌபதியைக்கீழேவிட்டு, அ கணத்து - அந்த க்ஷணத்திலே, அழன்று - கோபங்கொண்டு, படும் பணைகுன்றம் ஒன்று வேரோடுஉம் பறித்து- (எதிரில்) நேர்ந்த பெரிய மலையொன்றைஅடியோடு பிடுங்கியெடுத்து, அவன் மேல் பட எறிந்தான்-அவ்வீமன்மேற் படும்படி அதனைவீசினான்;(எ-று.) அணங்கு -பெண்களிற் சிறந்தவள், நேர்ந்தது-முற்றெச்சம். (489) 14. | விட்டகுன்றினைத்தன்மேற்படாவண்ணம்விசும்பிடைப் பொடிபடக்கதையால், தொட்டனன்பின்னும் விசும்பினின்றவன்றன் றோளிணையொசிதரத்தாவிக், கட்டினன்குறங்கைக்குறங்கினால்வீசிக் கம்பமுற்றகிலமுங்கலங்கக், கிட்டினன்றலத்தின் மிசையடலரக்கன் கீழ்ப்படமேற்படவிழுந்தான். |
(இ-ள்.)விட்ட குன்றினை-(சடாசுரன்)வீசியெறிந்த அந்தமலையை, தன்மேல் படா வண்ணம் - தன்மேலே படாதபடி, விசும்பிடை பொடி பட- ஆகாயமார்க்கத்திலே பொடியாய் விடுமாறு, (வீமசேனன்), கதையால் தொட்டனன் - கதாயுதத்தால் தாக்கி, பின்உம்-அதன்பின்பு, விசும்பில்நின்றவன் தன்தோள் இணைஒசி தர தாவி - ஆகாயத்தில்நின்ற அவ்வரக்கனது இரண்டு தோள்களும் |