னருளைப்பெற்றுவிடுபட்டுப் போயின னென்பது வரலாறு. வீமனது நிறம் செந்நிற மாதலின், பொன்னின்மால்வரை உவமை கூறப்பட்டது. கன்னம் - கபோலம். நெஞ்சு - தானியாகுபெயராய், மார்புமாம். (491) 16. | விழுந்தவாளரக்கன்றருக்குநெஞ்சொடிந்து வெகுண்டி வன்றனைத்தளிமீண்டும், எழுந்துதோள்கொட்டியார்த்தழன்றுருமே றெனக்கொதித்திடுதலும்வீமன், அழுந்தவெவ்விரலாற்பிடித்தவன கலத் தடிகொடுமிதித்து வெண்பிறையின், கொழுந்துபோலெயி றோரிரண்டையுங் கஞ்சன் குஞ்சரமெனப் பிடுங்கினனால். |
(இ-ள்.)விழுந்த வாள் அரக்கன் - கீழேவிழுந்த கொடிய அவ்விராக்கதன், தருக்கு நெஞ்சு ஒடிந்து - செருக்கையுடைய (தனது) இதயம் சிறிது முறிபட்டு, வெகுண்டு-கோபித்து, இவன் தனைதளி - இவ்வீமனைக்கீழே தள்ளி, மீண்டுஉம் எழுந்து - மறுபடியும் எழுந்து, தோள் கொட்டி ஆர்த்து - (தனது) தோள்களைத்தட்டி யாரவாரித்து, அழன்று - கோபித்து, உரும் ஏறு என-பேரிடி போல, கொதித்திடுதலும் - உக்கிரங்கொண்டவளவில், - வீமன் - வீமசேனன், - அழுந்த -(அவனுடம்பு) நசுங்கும்படி, வெவ் விரலால் பிடித்து-கொடிய கைவிரல்களால் (அவனைப்) பிடித்து, அவன் அகலத்து அடிகொடு மிதித்து - அவன் மார்பிலே (தன்) கால்களால் மிதித்து, வெள் பிறையின் கொழுந்து போல் எயிறு ஓர் இரண்டைஉம்-வெண்ணிறமான இளஞ்சந்திரனையொக்கின்ற அவனது கோர தந்த மிரண்டையும், கஞ்சன் குஞ்சரம் என - கம்ஸனாலேவப்பட்ட யானையைப்போல[அதன்தந்தங்களைக்கண்ணன் பிடுக்கினது போல], பிடுங்கினன்-பறித்தான்; (எ-று.) வில்விழாவென்கிற வியாஜம்வைத்துக் கம்சனால்வரவழைக்கப்பட்டு ஸ்ரீகிருஷ்ண பலராமர்கள் கம்ஸனரண்மனையைநோக்கிச் செல்லுகையில், அவனது அரண்மனைவாயில்வழியில் தம்மைக் கொல்லும்படி அவனால் ஏவி நிறுத்தப்பட்ட குவலயாபீடமென்னும் மதயானைதம்மீது கோபித்துவர, அவ்யாதவவீரர் அதனையெதிர்த்துஅதன் தந்தங்களிரண்டையுஞ் சேற்றிலிருந்து கொடியையெடுப்பதுபோல எளிதிற் பறித்து அவற்றையே ஆயுதமாகக் கொண்டு அடித்து அவ்யானையைஉயிர்தொலைத்துஉள்ளே போயினரென்பது கதை. கஞ்சன் - கம்ஸன்:இவன், வசுதேவரது மனைவியானதேவிக்கு உடன்பிறந்தவனாதலின்,கண்ணனுக்கு மாமனாவன். அகலம்-அகற்சி; விசாலமானமார்புக்குத் தொழிலாகுபெயர். தளி - தள்ளி: கொடு - கொண்டு:விகாரம். ஆல் - ஈற்றசை. (492) 17. | புலவுகால்வயிரவாளெயிறிரண்டு முதலொடும்போனவா ணிருதன், நிலவிலாநிசியுமின்னிலாவிடிகொ ணீலமாமுகிலையு நிகர்த்தான், குலவுதோள்வாயுகுமரன்மேன்மீளக்கொதித்தெழுந்திரு கரங் கொண்டு, மலையின்மேலுருமுற்றென்னமற்றவன்றன்மார்பகஞ்சுழி தரப்புடைத்தான். |
|