பக்கம் எண் :

318பாரதம்ஆரணிய பருவம்

     (இ-ள்.) புலவுகால் - (தசையுண்ணுதலாற்) புலால் நாற்றத்தை வீசுகிற,
வயிரம் வாள் எயிறு இரண்டுஉம் - வயிரம்போல் உறுதியான கூர்மையான
(தனது) தந்தங்கள் இரண்டும், முதலொடுஉம் போன-வேரோடு ஒழியப்பெற்ற,
வாள் நிருதன் - கொடுமையையுடைய அவ்விராக்கதன்,-நிலவுஇலா நிசிஉம்
- சந்திரகாந்தியில்லாத இராத்திரியையும், மின் இலா இடி கொள் நீலம்
மாமுகிலைஉம்- மின்னலில்லாத இடித்தலைக்கொண்ட நீலநிறமுள்ள
பெரிய மேகத்தையும், நிகர்த்தான் - ஒத்தவனாய்,-மீள- மறுபடி, கொதித்து
எழுந்து - கோபங்கொண்டு எழுந்திருந்து, இரு கரம் கொண்டு - (தனது)
இரண்டு கைகளால், மலையின்மேல்உரும் உற்று என்ன - மலைமேலே
இடிவிழுந்தாற்போல, குலவு தோள் வாயு குமரன்மேல் - விளங்குகின்ற
தோள்களையுடையவாயுவின் குமாரனானவீமசேனன்மீது, அவன்தன்
மார்புஅகம் சுழிதர-அவனது மார்பினிடம் குழிபடும்படி, புடைத்தான் -
தாக்கினான்;(எ-று.)-மற்று - அசை.

     நிலவும்மின்னலும் வெண்மையாக விளங்குங் கோரப் பல்லுக்கும்,
நிசியும் முகிலும் கரிய வடிவுகொண்ட அரக்கனுக்கும் உவமை.  இடிகொள்
முகிலென முகிலைவிசேடித்தது, அரக்கன் கர்ச்சனையாரவாரமுடைமையின்.
வயிரம்-வச்சிராயுதமும் மரவயிரமுமாம் வாயின் வாளெயிறு என்றும் பாடம்.
'சுளிதர'என்றபாடத்துக்கு - ஒடிய வென்க.                 (493)

18.முட்டியால்வஞ்சமூர்க்கனுஞ்சமர மொய்ம்பனு
                             முறைமுறை யாக,
மட்டியேமுதலாவுள்ளமற்றொழிலின்வல்லனவல்லனபுரிந்து,
கட்டியேகுறங்குகுறங்குடன்பகைப்பக்கரங்கரத்தொடுநனி
                                     பிணங்க,
ஒட்டியேமுடுகியொரு வருக்கொருவருரத்துடன்மோதினா
                                    ருரவோர்.

     (இ - ள்.)உரவோர் - வலிமையையுடையவர்களாகிய, வஞ்சம்
மூர்க்கன்உம்-வஞ்சனைக்குணமுள்ளமூர்க்கனானசடாசுரனும், சமரம்
மொய்ம்பன்உம்-போரில் ஆற்றலையுடையவீமனும், முறை முறை ஆக-மாறி
மாறி, முட்டியால்-(தமது) கைப்பிடியால், மட்டிஏ முதல் ஆ உள்ள
மல்தொழிலின்-மட்டியென்பதை முதலாகவுடைய
மற்போர்த்தொழில்வகைகளுள், வல்லன வல்லன புரிந்து - (தாந்தாம்)
வல்லவிதங்களைச்செய்து, குறங்கு குறங்குடன் பகைப்ப - ஒருவர் தொடை
ஒருவர்தொடையுடனே மாறுபடும்படி, கட்டி - கட்டிக்கொண்டும், கரம்
கரத்தொடு நனி பிணங்க ஒட்டி - ஒருவர்கைகள் மற்றொருவர்கைகளோடு
நன்றாகமாறுபடும்படிபின்னிக்கொண்டும், முடுகி - உக்கிரங்கொண்டு,
ஒருவருக்கு ஒருவர்-ஒருத்தருக்கொருத்தர், உரத்துடன்-உறுதியுடனே,
மோதினார்-தாக்கினார்கள்;(எ - று.)

     முட்டி - முஷ்டி:சமரம் - ஸமரம்:வடசொற்கள்.  மட்டி -
மற்போர்த்தொழில்வகைகளில் ஒன்று.  மல்தொழில் - ஆயுதமில்லாமல்
உடம்பினு றுப்புகளைக்கொண்டுசெய்யும் போர்.  ஒட்டி - வீரவாதஞ்செய்து
என்றுமாம்.                                               (494)