19. | முருக்கிவெஞ்சமரமிவ்வகை வெம்போர்மொய்ம்பனீடுயர் முழந்தாளால், அரக்கனையகலத்தமுக்கியிட்டவன்றனவயவமியாவை யுமொன்றாச், சுருக்கியந்தரத்திற்சுழற்றினனெறிந்தான் றொடுகழலிரா கவன்முன்னம், குரங்குநாயகன்முன்விரலினாற்றெறிந்தகுன்றெனச்சிந் திவீழ்ந்திடவே. |
(இ - ள்.) இவகை - இந்தப்படி, வெம் சமரம் - கொடிய போரை, முருக்கி - அழிவுண்டாம்படி செய்து, வெம் போர் மொய்ம்பன்-கொடிய போரில் திறமையுடைய வீமன், நீடு உயர் முழந்தாளால் - நீண்ட (வலிமையிற்) சிறந்த (தனது) முழங்கால்களினால்,அரக்கனைஅகலத்து அமுக்கியிட்டு - சடாசுரனைமார்பிலே அழுத்தியிட்டு, அவன்தன் அவயவம் யாவைஉம்ஒன்று ஆ - அவனது உறுப்புக்களெல்லாம் ஒன்றுபடும்படி, சுருக்கி - (அவனுடம்பை) ஒடுக்கிப்பிடித்து,-தொடு கழல் இராகவன் முன்னம் குரங்கு நாயகன்முன் விரலினால்தெறித்த குன்று என் சிந்தி வீழ்ந்திட - அணிந்த வீரக்கழலையுடையரகுகுலராமன் முன்னொருகாலத்தில்வானரராசனானசுக்கிரீவ னெதிரிலே (தனது) கால் விரலால் தெறித்துவீசின மலைபோன்ற(துந்துபியென்னுமரக்கனது) எலும்புக்குவியல் போலச் சிதறி விழும்படி, அந்தரத்தில் சுழற்றினன் எறிந்தான்-ஆகாயத்திலே சுழற்றிவீசினான்; இராமபிரான்அனுமான்மூலமாகச் சுக்கிரீவனோடுசினேகஞ்செய்து, அவனதுமனைவியைக்கவர்ந்துகொண்டுஅவனைஇராச்சியத்தினின்று துரத்திவிட்ட அவனது அண்ணனானவாலியைஅவன்வேண்டுகோளால் தான் கொல்வதாக வாக்குத்தத்தஞ் செய்தான். 'வாலியைக்கொல்லவல்லவலிமை இவருக்குஉளதோ?'என்று சுக்கிரீவன் சிறிதுசந்தேகிக்க, அவ்வையத்தை அகற்றுதற்பொருட்டு ஸ்ரீராமமூர்த்தி அங்கே முன் வாலியாற்கொல்லப்பட்ட துந்துபி யென்னும் பேரசுரனது உடம்பின் என்புக்குவியல் ஒருபால் மலைபோலக்குவிந்துகிடந்ததைத் தன்கால்விரலால் எடுத்து வெகுதூரத்தில் வீசி அவனுக்கு நம்புதலுண்டாக்கினாரென்பதுகதை. (495) 20. | எறிந்தவாளரக்கன்விசும்பினதெல்லையெவ்வளவவ்வள வும்போய், மறிந்தமால்வரைபோன்மீளவும்விமேன் மாசுணநடுங் குறவீழ்ந்து, செறிந்தபேருடலுமாவியுஞ்சிந்தத் தென்புலத்திமைப் பினிற்சென்றான், அறந்துறந்தென்றுமடாதனசெய்தால ர்கொலோ படாதனபடாதார். |
(இ-ள்.) எறிந்த வாள் அரக்கன் - (வீமசேனனாற்)சுழற்றியெறியப்பட்ட கொடிய அவ்விராக்கதன், விசும்பினது எல்லைஎ அளவு அ அளவுஉம் போய் - ஆகாயத்தினெல்லைஎவ்வளவு உண்டோ அவ்வளவுஞ்சென்று, மீளஉம் - மறுபடியும், மறிந்த மால் வரை போல் - (இறகொடிந்து) அழிந்த பெரியதொரு மலைபோல,புவிமேல் - பூமியிலே, மாசுணம் நடுங்குற - (அதனைத்தாங்குகிற) ஆதிசேஷன் (பாரமிகுதியால்) நடுக்கமடையும்படி, |