வீழ்ந்து -விழுந்து,-செறிந்த பேர் உடல்உம் ஆவிஉம் சிந்த - (பலகாலமாய் ஒன்றோடொன்று)கூடியிருந்த பெரிய (தனது) உடம்பும் உயிரும் (தனித்தனி) சிதறுமாறு, இமைப்பினில் - மாத்திரைப்பொழுதினுள்ளே, தென் புலத்து - தென்திசையிலுள்ள யமலோகத்துக்கு, சென்றான்- போனான்:அறம் துறந்து - தருமத்தைவிட்டு, என்றுஉம் - எப்பொழுதும், அடாதன செய்தால்-தகாத காரியங்களைப்பண்ணினால்,படாதன படாதார் - அனுபவிக்கமுடியாத தீங்குகளைஅடையாதவர், ஆர்கொல்ஓ - யாவரோ? அடாதுசெய்பவர்படாதுபடுவர் என்பது கருத்து. இக்கவிவேற்றுப் பொருள்வைப்பணி. மறிந்த-மேல்கீழாகவீழ்ந்த என்றுமாம். வேறு. 21.-சடாசுரனிடத்தினின்று தப்பின திரௌபதியின் வருணனை. வாளரவமுண்டுமிழும் வாண்மதியும் வஞ்சக் கோளுழுவைகொள்ளவிடர் கொண்டுகுலைகுலையா நாள்வலியி னுய்ந்தமட நவ்வியுநி கர்த்தாள் காளவிடமுண்டமுத டக்குமிரு கண்ணாள். |
(இ - ள்.)(இங்ஙனம் சடாசுரனால்நேர்ந்த ஆபத்தினின்று தப்பின), காள விடம் உண்டு அமுது அடக்கும் இரு கண்ணாள்- கரியவிஷத்தையுட்கொண்டு அமிருதத்தையும் தன்னுளடக்கிய இரண்டுகண்களையுடையதிரௌபதி,-வாள் அரவம் உண்டு உமிழும் வாள் மதிஉம் - வாள்போலுங்கொடிய பாம்பினாலுட்கொண்டுஉமிழப்பட்ட ஒளியையுடைய சந்திரமண்டலத்தையும், வஞ்சம்கோள் உழுவை கொள்ள - வஞ்சனையோடுகொல்லுந் தன்மையுடைய புலி (தன்னைக்) கவர்ந்துகொள்ளுதலால், இடர் கொண்டு குலைகுலையா- துன்பத்தையடைந்து நடுநடுங்கி, நாள் வலியின் உய்ந்த மடம் நவ்விஉம் - (முன்னையஊழ்வினையாலாகிய)ஆயுள் வலிமையினால்தப்பிப்பிழைத்த இளமையான பெண்மானையும்,நிகர்த்தாள் - ஒத்தாள்;(எ - று.) அரவமும்உழுவையும் அரக்கனுக்கும்;மதியும் நவ்வியும் திரௌபதிக்கும் உவமை. காலவிசேஷங்களில் சூரியனைமறைக்கின்ற சந்திரனது சாயையும், சந்திரனைமறைக்கின்றபூமியினது சாயையும் ஆகிய சாயாகிருகங்களைஇராகுகேதுவென்னுங் கரும் பாம்புசெம்பாம்புகளாக வருணித்தல் கவிமரபு. கோள் - உயிர் கொள்ளுந்தன்மை;முதனிலைதிரிந்த தொழிற்பெயர். விடமுண்டு அமுதடங்குங் கண் என்றது - ககவிழியின்கருமையையும் சுற்றுப்புறத்தின் வெண்ணிறத்தையும் பற்றி;இனி, கூடாதகாலத்துக் காமநோய் வருத்தத்தையும், கூடியகாலத்து மிக்க மகிழ்வையுந் தருதல்பற்றி யாகவுமாம்;"மாண்பில்நஞ்சு மமிர்தமுமே போல்குணந்த பொரு கயற்கண்,""அமிழ்தினின்விளர்த்துள் நஞ்சினிற் கருகி"என்றார்சிந்தாமணியிலும், நைடதத்திலும் |