பக்கம் எண் :

336பாரதம்ஆரணிய பருவம்

யெனினுமாம். அதிபதியா மெண்ணாயிரமியக்கேசரும்என்ற பாடம்
எண்வழுவாம்.                                         (523)

22.-எண்ணாயிரவர்சேனாதிபதிகள்வீமனைவளைத்தல்.

தாமப்புரிசையின்வாயிலெ ழுந்தானையின்வெள்ளம்
நேமிக்கிரிநெரியப்புரி நெடுவெள்ளநிகர்ப்பத்
தூமனக்கனல்சொரிகண்ணின ரெண்ணாயிரர்தொலையாச்
சேமக்கவசியர்வீமனைத்திரையாழியிற்சூழ்ந்தார்.

     (இ-ள்.)தாமம் - ஒளியையுடைய, புரிசையின் - (அவ்வளகாபுரியின்)
மதிலினது, வாயில் - கோபுரவாயிலினின்று, எழும் - புறப்பட்ட, தானையின்
வெள்ளம் - சேனையின்கூட்டம்,நேமி கிரி நெரிய புரி -
சக்கரவாளமலையும்அழியும்படி செய்கின்ற, நெடு வெள்ளம் நிகர்ப்ப -
பெரிய (பிரளயகாலக் கடல்) வெள்ளத்தை யொத்திருக்க, தூமம் கனல்
சொரிகண்ணினர்-புகையோடுகூடிய நெருப்பை யுமிழ்கிற கண்களை
யுடையவர்களும், தொலையாசேமம் கவசியர்-(ஆயுதங்களால்) அழியாத
(உடம்புக்குக்) காவலான கவசத்தை யணிந்தவர்களுமாகிய, எண்ணாயிரர்-
எட்டாயிரவரான சேனாபதிகள்,திரை ஆழியின-அலைகளையுடைய
கடல்போல, வீமனைசூழ்ந்தார்-வீமசேனனைவந்துவளைத்தார்கள்;(எ-று.)

    பூமியைச்சூழ்ந்துள்ள கடலைச்சுற்றிலும் கோட்டைமதில்போலச்
சூழ்ந்துள்ளது சக்கரவாளமலையென நூல்கள் கூறும்.  அந்த நகரத்துக்குக்
கோட்டை மதில்வாயிலிலே நிறைந்துபரவிய சேனைக்குச்
சக்கரவாளகிரியின்மீது பரவிய பெருங்கடலைஉவமைகூறினார். வெள்ளம் -
ஒருபேரெண்.  சேமம்-க்ஷேமம்.  கவசி=கவசீ: கவசத்தை யுடையவன்:
வடசொல்;கவசம் - இரும்பு முதலியவற்றாலாகிற உடம்பின் மேற்சட்டை;
இது, போரிற் பகைவரெறியும் படைக்கலங்களைஉடம்பிற் படாது காப்பது.
                                                        (524)

23.-சேனைக்கடலிடையே நிற்கும் வீமன் வருணனை.

உதிக்குஞ்சுடரோராயிர முருக்கொண்டெனவொளிகூர்
விதிக்குஞ்சமர்தொலையாவிறல்விச்சாதரர்வெள்ளக்
கொதிக்குங்கடலிடைநின்றிடு குமரன்குரைகடன்முன்
மதிக்கும்படிநெடுமாலிடு மாமந்தரமொத்தான்.

     (இ-ள்.)உதிக்கும் சுடர் ஓர் ஆயிரம் - உதயமாகின்ற ஒரு
ஆயிரஞ்சூரியர்கள், உரு கொண்டு என - (இச்சேனையின்)வடிவத்தைக்
கொண்டாற்போல, ஒளி கூர் - தேககாந்தி மிகுந்த, விதிக்குஉம் சமர்
தொலையாவிறல் விச்சாதரர் வெள்ளம் - (படைத்தற்கடவுளான)
பிரமனுக்கும் போரில் அழிக்கவொண்ணாதவலிமையையுடைய
வித்தியாதரர்களின் கூட்டமாகிய, கொதிக்கும் கடல் இடை-பொங்கியெழுகிற
கடலின் நடுவே, நின்றிடு - (போருக்கு) நிலையாய்நின்ற,குமரன்-
இளம்பருவமுடையவனானவீமன், குரை கடல் முன் மதிக்கும்படி நெடு
மால் இடும் மா மந்தரம் ஒத்தான்-ஒலிக்கின்ற பாற்கட