| பேரணிகலன்றனி பிறங்குமணிமார்பன் தாரணியெனத்தனது தண்டுகொடுடைத்தான். |
(இ-ள்.)போர் பேர் அணிகலன் - யுத்தத்தையே பெரிய ஆபரணமாகவுடையவனும், தனி பிறங்கும் மணி மார்பன் - ஒப்பில்லாமல் விளங்குகிற அழகிய மார்பை யுடையவனுமாகிய வீமன்,-தேர் அணிஉம் - (தன்னைவளைந்துபொருத)தேர்ச்சேனையையும்,வெம்பொறி என செறி புகர் கை கார் அணிஉம் - வெவ்விய அனற்பொறிகள்போல் (ச் செந்நிறமாய்) நெருங்கிய புள்ளிகளையுடையதுதிக்கையையுடைய மேகம்போன்ற யானைகளின்சேனையையும்,வாயு நிகர் கற்கி அணிஉம்- காற்றையொத்த (அதிவேகத்தையுடைய) குதிரைகளின் சேனையையும்,தனது தண்டுகொடு - தன்னுடைய கதாயுதத்தால், தார் அணி என - பூமாலையினொழுங்கைக்கெடுத்தல்போல, உடைத்தான் - (எளிதில் நிலைகுலையுமாறு)அழித்தான்;(எ - று.) "போரின்றிவாடும் பொருநர்சீர்","விழுப்புண்படாதநாளெல்லாம் வழுக்கினுள், வைக்குந் தனனாளையெடுத்து"என்றபடிபோரில்லையாயின் பொலிவுகெடுதலும் சிறந்த போர் நேர்பட்டால் பொலிவுமிகுதலும் சுத்தவீராக்கு இயல்பு ஆதலால், 'போர்ப்பேரணிகலன்'என்றது. 'புகர்க்கைக்கார்'எனவே, யானையாயிற்று. முகத்திற் செம்புள்ளிகளிருத்தல், யானைக்குஉத்தமவிலக்கணம். அணிமார்பு என்றும் பிரிக்கலாம். தாரணிஎன - சூரியபுத்திரனானயமன்போல உரைக்கலாம். [தரணி- சூரியன்.] (544) 43. | நெரிந்தனரதந்துனையுநேமியுடன்வேழம் சரிந்தனநெடுங்குட ரரிந்துதலைதாள்போய் முரிந்தனபெரும்புரவி வெள்ளமுனைதோறும் விரிந்தனருரங்கடவுள் விஞ்சையர்கண்மன்னோ. |
(இ-ள்.)(அப்போரில்), முனைதோறுஉம் - போர்க்களத்தினிடங்களிலெல்லாம், ரதம் - தேர்கள், துனையும்நேமியுடன்- விரைந்து செல்வனவான சக்கரங்களுடனே, நெரிந்தன-சிதைபட்டன; வேழம்-யானைகள்,நெடு குடர் அரிந்து - நீண்டகுடல்கள் அறுபட்டு, சரிந்தன - கீழேவிழுந்தன;பெரு புரவி வெள்ளம்-பெரிய குதிரைகளின் கூட்டம், தலைதாள் போய்-தலைகளுங்கால்களுந் துணிபட்டு, முரிந்தன - அழிந்தன;கடவுள் விஞ்சையர்கள் - தெய்வத்தன்மையையுடைய வித்தியாதரர்கள், உரம் விரிந்தனர் - மார்புவிரிந்தார்கள்:(எ - று.)-மன், ஓ-ஈற்றசை. (545) 44. | மீளியொருதண்டுகொடு விண்டெதிர்வெகுண்டோர் மூளைநிணம்வாயுகமுருக்குதலுமொய்ம்பின் தாளுடையமருத்தெதிர் சரிக்கும்வகையெய்தும் பூளைவனமொத்தனர்பொரும்பொருநரெல்லாம். |
(இ - ள்.)மீளி-வலிமையிற்சிறந்த வீமன், ஒரு தண்டுகொடு-(தனது) ஒப்பற்றதொரு கதாயுதத்தால், விண்டு -பகைத்து, எதிர் வெகுண்டோர் மூளைநிணம் வாய் உக - எதிர்த்துநின்று கோபங் |