வேறு. 49.-புறங்கொடுத்துவந்த சேனாபதிகளைமணிமான் இழித்துக் கூறல். வானி லவுணரை மோதி முனைதொறும்வாகை புனைமணிமானுமச் சேனைமுதல்வரை வேக முறநனி சீறி யுரைபல கூறினான் ஆனி லனதுடல்வீழ வமரிடை யாவி கவர்தர வஞ்சிநம் தானையரியெதி ரேகு கரியின மாகி வெருவொடு சாய்வதே. |
இரண்டு கவிகள் -ஒருதொடர். (இ-ள்.)வானில்-ஆகாயத்திலே, முனைதொறுஉம்-ஒவ்வொரு யுத்தத்திலும், அவுணரை மோதி-அசுரர்களைதாக்கி,வாகை புனை- வெற்றியைக் கொண்ட, மணிமானும்-, அ சேனைமுதல்வரை- (முதுகுகாட்டியோடிவந்த) அந்தச்சேனாபதிகளை(ப் பார்த்து), வேகம் உற நனி சீறி-கடுமையாக மிகவுங்கோபித்து, உரை பல கூறினான்- பலவார்த்தைகளைச்சொல்லினான்:(அவை யாவையெனில், 'அமரிடை- போரிலே, ஆனிலனது உடல் வீழ-வாயுகுமாரனானவீமனது உடம்பு கீழ்விழும்படி, ஆவி கவர்தர-(அவனது) உயிரை (உடம்பினின்று) அழித்தற்கு, அஞ்சி-பயந்து, நம் தானை-நமதுசேனை,அரி எதிர் ஏகு கரி இனம் ஆகி - சிங்கத்தினெதிரிலே பயந்தோடுகிற யானைக்கூட்டத்தை யொத்து, வெருவொடு - அச்சத்துடனே, சாய்வதுஏ-(இங்ஙனம்) புறங்கொடுத்து அழிவதா!!' (எ - று.) ஈற்றேகாரம் -வினாவகையால்,அது சிறிதுந் தகுதியன்று என்ற இழி தகைமையை யுணர்த்தும். ஆநிலன் - அநிலனது மகன்;அநிலன் - வாயு. ஆனிலியின்என்று பிரதிபேதம். இதுமுதல்ஆறுகவிகள் - பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்தாஞ்சீர்கள் தேமாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள் கரு விளச்சீர்களும், ஏழாவது கூவிளச்சீருமாகிய கழிநெடிலடிநான்கு கொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள். (551) 50.-மணிமான் சேனையோடுவீமனைநெருங்கதல். என்றுதனதெதிர்நின்றவரையிகழ் வுற்றுமொழிபலசொற்றுமற் குன்றமெனவமர்வென்றிதருவதொர் கும்பமதகரிமேல்கொளா ஒன்றுபடவுலகின்றுபொடிபட வுந்துகரிரதமுந்தெனச் சென்றுபுடைவருகின்றபடையொடு தெண்டதரனெதிர்மண்டினான். |
(இ - ள்.)என்று-, (மணிமான்), தனது எதிர் நின்றவரை இகழ்வுற்று - தனக்குஎதிரில்நின்ற சேனாதிபதிகளைமிகஇகழ்ந்து, மொழி பல சொற்று- பலசொற்களைக்கூறி, மல் குன்றம் என - வலிமையையுடைய மலைபோலவுள்ள,அமர் வென்றி தருவது ஒர் கும்பம் மதம் கரி மேல்கொளா-போரில் வெற்றியைத் தருவதாகிய மஸ்தகங்களையும் மதத்தையுமுடைய ஒருபெரிய யானையின்மேல்ஏறிக் கொண்டு, 'உலகு ஒன்றுபட இன்று பொடி பட - உலகங்களெல் |