பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்351

லாம் ஒருங்கேஇப்பொழுது பொடியாய் விடும்படி, கரி ரதம்-(தனது)
யானையாகியவாகனத்தை, முந்து உந்து - முன்னே செலுத்துவாய்',என -
என்று (பாகனைநோக்கிக்)கட்டளையிட்டு,புடை வருகின்ற படையொடு-
பக்கத்திலேவருகிற (தனது)சேனையுடனே,சென்று -போய், தெண்டதரன்
எதிர்-கதாயுதத்தைத் தரித்துக்கொண்டுள்ள விமசேன னெதிரிலே,
மண்டினான்-நெருங்கினான்;(எ - று.)

     என்று மொழிபலசொற்று என இயையும். மல் குன்றம் என
என்பதற்கு-மற்போர்வல்ல மலைபோலஎன்று உரைத்து, மணிமானுக்கு
உவமையாக்கொள்ளினு மமையும்.                             (552)

51.-நான்குகவிகள்-மணிமானைச்சார்ந்தவர் மோதுண்ண
மணிமானும் மோதுண்டுஉட்குதலைக்கூறும்.

மண்டியெதிர்வருகின்றபொருநரை வன்புபெறுபுயமுன்பனும்
கண்டுமுகிழ்நகைகொண்டுதனதிரு கண்கள்கனலுகநின்றபின்
எண்டிசையும்வளைகின்றவிமையவரென்றினொளிதிகழ்குன்றினீர்
மொண்டுமுகிலெனவொன்றுபடமிசை மூசியெறிபடைவீசவே.

இரண்டுகவிகள் -குளகம்.

     (இ - ள்.)மண்டி எதிர் வருகின்ற பொருநரை-நெருங்கி(த் தன்)
எதிரிலே போருக்குவருகிற (மணிமான் முதலிய) வீரர்களை,வன்பு பெறு
புயம் முன்பன்உம் - வலிமைபெற்றதோள்களையுடையபராக்கிரமசாலியான
வீமனும்,-கண்டு-பார்த்து, முகிழ் நகை கொண்டு-(கோபத்தால்) அரும்புகிற
புன்சிரிப்பைச் செய்து, தனது இரு கண்கள் கனல் உக - தனது
கண்களிரண்டினின்றுங் கோபாக்கினி சொரிய, நின்றபின் - (போருக்கு)
நின்றபின், எண்திசைஉம் வளைகின்றஇமையவர்-எட்டுத்திக்குகளிலும்
(அவனைச்)சூழ்கிற (வித்தியாதரர்முதலிய) தேவகணத்தவர், என்றின் ஒளி
திகழ் குன்றில் நீர் மொண்டு முகில் என - சூரியனைப்போல்
ஒளிவிளங்குகிற மகாமேரு மலையின்மீதுநீரைமுகந்து மேகம் (சொரிதல்)
போல, ஒன்றுபட மிசை மூசி எறி படை வீச-(யாவரும்) ஒன்றாக
அவன்மேல் மொய்த்துக்கொண்டு வீசுதற்குரிய ஆயுதங்களைப்
பிரயோகிக்க,-(எ-று.) இக்கவியில் 'வீச'என்பது, மேற்கவியில் 'மிசைவர'
என்னும் வினையெச்சத்தைக்கொள்ளும்.

    முன்பன்-திறமையுள்ளவன்:(முன்பு - திறமை.) முன்பன்-முன்னமே
அங்குள்ளவ னென்றும், எதிரிலுள்ளவ னென்றுங் கொள்ளலாம்.    (553)

52.வீசுபடையொருகோடிவிசைபட வோடிமிசைவரவீமனும்
பாசதரனெதிர்நீலமயிலொரு பாகனிகரெனவேகியா
ஆசைதொறுமுகில்போலவளைபவராகுமிருபிளவாவுளம்
கூசியலமருமாறுதருவளர் கோடுகொடுநனிசாடினான்.