மேல்உருத்திஏல் -அவன்மேற் கோபிப்பாயானால்[போர்செய்தால் என்றபடி],உறு பயன்ஒன்றுஉம் இல்லை-அடையும்பயன்ஒன்றுமின்றாம்; (எ- று.) தோல்விநேருமேயன்றி வெற்றிநேராதென்பதாம். இப்போது செய்யத்தக்கது இன்னது என்று, இதனால்,உருத்திரசேனன் தெரிவிக்கின்றா னென்க. ஆல்-ஈற்றசை;தேற்றமுமாம். (592) 91.-உருத்திரசேனன்இங்ஙன்சொல்லவும் குபேரன் பொருவேனென்று செல்லுதல். என்றிவைதிருமக னியம்பியேத்தவும் நின்றிலனெனதுயிர் நேயநண்பனைக் கொன்றவன்றன்னுயிர் கொள்வன்யா னெனாச் சென்றனன்புட்பகத் தேரின்மீதரோ. |
(இ - ள்.)திரு மகன் - செல்வப்பிள்ளையானஉருத்திரசேனன், என்று - என்றுகூறி, இவை இயம்பி-(இன்னும்இப்படிப்பட்ட பல) வார்த்தைகளையுஞ்சொல்லி,ஏத்தஉம் - துதிக்கவும்,-(குபேரன்),-நின்றிலன்- (அது கேட்டுத் தடைப்பட்டு) நில்லாதவனாய்,எனது உயிர் நேயம் நண்பனைகொன்றவன் தன்உயிர் கொள்வன யான்எனா-'என்னுடைய உயிரோடொத்த அன்புள்ளசிநேகிதனானமணிமானைக்கொன்றவனது உயிரை வாங்குவேன் நான்'என்றுகூறி, புட்பகம் தேரின்மீது சென்றனன்- (தனது) புஷ்பக விமானத்திலேறி(ப்போருக்கு)ச்சென்றான்;(எ-று.)-அரோ - ஈற்றசை. புட்பகம் -புஷ்பகம்;குபேரன்விமானம்:இது எத்தனைபெயர் ஒருங்குவந்து இருப்பதானாலும்அவ்வளவுபேர்க்கும் தான் வளர்ந்து இடங்கொடுக்குந் தன்மையது;பாற்கடல்கடைந்தகாலத்து அதனினின்று எழுந்தது;உடையவன் நினைத்தவிடத்திற்குஆகாயமார்க்கத்திற் பறந்து செல்வது. நண்பனைக்கொன்றவன்தன் உயிர்கொள்வன்- நண்பனைக்கொன்றவனைக்கொல்லாதுவிடே னென்றபடி. (593) 92.-குபேரனோடுயட்சசேனைமண்விண்களிற் பரவிச்செல்லுதல். மண்ணெலாமிரதமுங் களிறும்வாசியும் விண்ணெலாம்விமானமும் விபுதரீட்டமும் பண்ணெலாமுரல்வன பணையின்குப்பையும் எண்ணலாமாவதோ வியக்கர்சேனையே. |
(இ-ள்.) மண்எலாம்-பூமிமுழுவதிலும், இரதம்உம்-தேர்களும், களிறுஉம்-யானைகளும், வாசிஉம்-குதிரைகளும், விண் எலாம்- ஆகாயமுழுவதிலும், விமானம்உம்-விமானங்களும், விபுதர் ஈட்டம் உம்- தேவர்களின்கூட்டமும், (பூமி ஆகாயம் இரண்டலும்), பண் எலாம் முரல்வன பணையின் குப்பைஉம்-சுரங்களையெல்லாம் ஒலிப்பனவான வாத்தியங்களின் தொகுதியும், (ஆக இவ்வாறு), இயக்கர் |