சேனை-யக்ஷசேனை,எண்ணல் ஆம் ஆவதுஓ - அளவிடக்கூடியதாவதோ? [அன்றென்றபடி];(எ - று.) குபேரன்புட்பகவிமானத்தின்மேலேறி வீமனுடன் போர்செய்யப் புறப்படுகையில் அளவிறந்த இயக்கர்சேனை,தேர் யானைகுதிரை விமானங்களோடும் பலவகைவாத்தியகோஷத்தோடும் பூமியிலும் ஆகாயத்திலும் பரவி உடன்சென்றன வென்பதாம். எண்ணலாமானதோ என்றும் பாடம். (594) 93.-மண்விண்களில்வரும் யட்சசேனையை யுதிரட்டிரன்காணுதல். விண்டலமுறவரு சேனைவேலையும் மண்டலமுறவெழு மகரவாரிபோல் எண்டிசையுறப்பரந் தெழுந்தசேனையும் கண்டனன்கண்ணுறக் கருணைக்கண்ணனே. |
(இ - ள்.)விண் தலம் உற-ஆகாயத்தினிடத்திற்பொருந்த,வரு-வருகிற, சேனைவேலைஉம்-யக்ஷசேனாசமுத்திரத்தையும்,மண்தலம் உறஎழும்- பூலோகத்தினிடம் முழுவதிலும் பொருந்தும்படி மேலெழுகிற, மகரம் வாரி போல்-சுறாமீன்களையுடையபிரளயக்கடல்போல, எண் திசை உற- எட்டுத்திக்குகளிலும் பொருந்த, பரந்து-பூமியிற்), பரவி, எழுந்த - (போருக்கு) எழுந்த, சேனைஉம்-யக்ஷசேனையையும்,கருணைகண்ணன் - அருளொழுகுங்கண்களையுடையயுதிட்டிரன், கண் உற கண்டனன்-(தன்) கண்ணெதிரிலே பொருந்தப்பார்த்தான்; வாரி-நீர்;இது-வடசொல்:இங்கே, கடலுக்கு இலக்கணை. பிற உயிர்மேற் கண்பார்வைசென்றவிடத்து அதன்வழியாக அருள்நிகழ்வதாதலால், கருணைக்கண்ணனென்றார்; இதனை 'கண்ணோட்டம்' என்பதனாலும்அறிக. (595) 94.-தருமன்தம்பியைச்சினந்து குபேரனைவணங்குதல். உணங்கினானுடலமுமுணர்வுமாவியும் பிணங்கினானிளைஞனைப்பேதைபங்கனோடு இணங்கினான்புகழெலாமேத்திநெஞ்சுற வணங்கினான்மணிமுடிமன்னர்மன்னனே. |
(இ - ள்.) மணி முடி மன்னர் மன்னன் - இரத்தினங்கள்பதித்த கிரீடத்தையுடைய அரசர்களுக்கரசனானதருமபுத்திரன்,-(அச்சேனைகளைக் கண்டமாத்திரத்தில்), உடலம்உம் உணர்வும் ஆவிஉம் உணங்கினான்- உடம்பும் அறிவும்உயிரும் ஒடுங்கி, இளைஞனைபிணங்கினான்-(தன்) தம்பியான வீமனைக்கோபித்து, பேதை பங்கனோடுஇணங்கினான்புகழ் எலாம் ஏத்தி-(எப்பொழுதும்) இளமைப்பருவத்தையுடைய உமாதேவியைவாமபாகத்திற்கொண்ட சிவபிரானோடுகூடிய நண்பனான குபேரனது கீர்த்தியையெல்லாந் துதித்து, நெஞ்சு உற வணங்கினான்- மனம்பொருந்த(அவனை)நமஸ்கரித்தான்;(எ-று.) - பேதை - பேதைமையுடையவளுக்கு ஆகுபெயர். (596) |