(இ - ள்.)'அரு- செய்தற்குஅரிய, மா தவம் - சிறந்த தவத்தின், பேறு-பயன், எமக்கு-, ஆனது-வாய்த்தது:அம்மா - ஆச்சரியம்!'என்ன- என்று, செம்மாந்து,-துருவாசமுனிவர் தம்மிடத்து வந்ததுகுறித்துப்) பெருமிதங்கொண்டு,-மா குரு மரபோர் ஐவர் உம்-சிறந்த குருவமிசத்தவரைவரும்,-தம் குஞ்சி தலைமேல்- தம்முடைய மயிர்முடியையுடைய சிரசின்மேல், அடி - (துருவாசமுனிவருடைய) திருப்பாதங்களை,வைத்து-, 'எம்பெருமான்-எமதுபெருமானே! இங்கே எழுந்தருள பெற்றேம்-(நீர்) இங்கே யெழுந்தருளும் பாக்கியத்தை யடைந்தோம்,'என்ன-என்று, பெரிது உவந்து-மிகவும் மகிழ்ந்து சொல்லி, அங்கு - அப்போது, அரு மா முனியை-(கிடைப்பதற்கு) அரிய சிறந்த அம்முனிவரை, பூசித்தார்-:அவன்உம் - அந்த முனிவனும், ஆசி - வாழ்த்தை, புகன்றான்- (பாண்டவர்க்குக்) கூறினான்;(எ-று.) செம்மாத்தல்-அந்தப்பெரியோர் எழுந்தருளப் பெறும் பாக்கியத்தைக் கருதியதனாலாகியது. குஞ்சித் தலைமேல்அடிவைத்து-தமது சிரசின்மேல் முனிவருடைய பாதங்களையிருக்குமாறுவைத்து என்க:அடிமேல் குஞ்சித் தலைவைத்துஎனினுமாம். பேறு-பெறப்படுவது:செயப்படுபொருள்விகுதி புணர்ந்துகெட்டு முதனீண்ட பெயர்:பயன் என்பது பொருள். (616) 3.-யுதிட்டிரன்உபசரிக்க, துருவாசன் 'சூரியனுச்சிக்குவந்துவிட்டதனால்யாம் உண்ணுங்காலம் இது'எனல். இட்டதவிசின்மிசையிருத்தி யெரிகான்வந்தவிளைப்பாற்றிக் தொட்டகழற்காலுதிட்டிரன்கை தொழுதுதுதிப்பத்துருவாசன் வட்டமணித்தேரவனுச்ச வானத்தடைந்தான்யாமருந்தப் பட்டவுணவிங்கமுதுசெயப் பருவமிதுவென்றுரைசெய்தான். |
(இ-ள்.)இட்ட-போகடப்பட்டிருந்த, தவிசின் மிசை-ஆசனத்தின் மேலே, இருத்தி-உட்காரவைத்து, எரி கான்-எரியுந்தன்மையுள்ள காட்டிலே, வந்த-வந்ததனாலான,இளைப்பு-சிரமத்தை,ஆற்றி-தணியச் செய்து,-கழல் தொட்ட கால் உதிட்டிரன் - வீரக்கழலையணிந்தபாதங்களையுடைய தருமபுத்திரன்,-கைதொழுது-கைகூப்பி,துதிப்ப -தோத்திரஞ் செய்யா நிற்கையில்,-துருவாசன்- அந்தத் துருவாசமுனிவன்,-வட்டம் மணி தேரவன்-வட்டவடிவமாக இருப்பவனும் அழகியதேரின்மீதுவருபவனுமாகிய சூரியன், வானத்து உச்சம் அடைந்தான்-வானத்திலேஉச்சியையடைந்திட்டான்: யாம்-, இங்கு-இவ்விடத்திலே, அருந்தப்பட்ட-உண்பதற்கு ஏற்ற, உணவு- உண்டியை, அமுதுசெய-உண்ண(த்தக்க,) ஆரணியபருவம் - காலம், இது- இதுவாகும்', என்று-,உரைசெய்தான்-;(எ-று.) மூங்கில்போன்ற சிலசெடிகள் ஒன்றோடொன்றுஇழைவதால் எரியும் இயல்பினது காட்டினிடம் என்க. அமுதுசெய என்பதன்பின் பெயரெச்சம் வருவிக்க, அமுதுசெய்தல்-உண்ணல். |