ஐயோ! ஐயோ!இதற்கு-இவ்வாறு இவன்வந்ததற்கு, இன்று-இப்போது, என் செய்வேம் -(நான்சொல்லுவது தவிர வேறுஉபாயம்) என்ன செய்யவல்லோம்? (இங்ஙனம் ஏவிய துரியோதனாதியர்க்கு),நாம்-,ஆம்- பொருந்திய, மாறுஆக-பகையாக, எழுந்து-புறப்பட்டு, சென்று-போய்,-கோ ஆனவன்உம்-ராஜராஜனானஅத்துரியோதனனும், பல படைஉம்- (அவனுடைய) பலசேனைகளும்,குன்ற-ஒழிந்து போம்படி, பொருது- போர்செய்து, இமைப்பில் - இமைப்பொழுதிற்குள், சாவா நிற்பது- (நம்முயிரும்) மாயநிற்பது, இனி - இப்போது, உறுதி-(நாம்) செய்யத்தக்க சிறந்தசெயல்,'என்றான்- என்று தன் கருத்தைத் தெரிவித்தான்;(எ-று.) கொடியமுயற்சியில் எப்போதுங் கருத்துச்செல்பவனாதலால்,வீமன் அதற்குஏற்ப, நம்மீது இம்முனிவனைஏவிய நம்பகைவரைப் பழிவாங்குமாறு கொன்றுவிட்டு நாமும் உயிர்மாய்வதே செய்யத் தக்க செயலென்றான்: நீராடிவந்த முனிவனுக்கு உணவளிக்காவிட்டால் அவன் சாபத்திற்கு இலக்காய்ச் சாகவேண்டிவருமாதலால், பகை முடித்து இறந்திடுவோ மென்றானென்க. ஆஆ - இரக்கக் குறிப்பிடைச்சொல். சமீரணி- வாயுபுத்திரன்:சமீரணன்-வாயு. (619) 6.-விசயன்வீமனதுபேச்சை ஆட்சேபிக்க, நகுலன் க்ருஷ்ணனைவிரைந்துவரவழைக்குமாறு சொல்லல். சுருதிக்கடவுளனையானைச்சுனைநீர்படிந்துவரச்சொல்லிக் கருதிப்பிறநாம்புரியுமது கடனோவென்றான்கழல்விசயன் மருதிற்கிடைபோமவன்விரைந்துவருமாறழைமினெனமொழிந்தான் ஒருதிக்கினும்வெம்பரியேற்றுக் கொத்தோரில்லாவுரவோனே. |
(இ - ள்.)கழல் விசயன் - வீரக்கழலையணிந்தஅருச்சுனன், 'சுருதி கடவுள் அனையானை- வேதத்தினாற்புகழப்படுகிற கடவுள் போலப் பெருமைவாய்ந்த துருவாசமுனிவனை,சுனைநீர் படிந்து வர சொல்லி- சுனைநீரிலேநீராடிஉண்ணுதற்கு வரும்படி சொல்லிவிட்டு, நாம்-, பிற கருதி - (மனத்தில்) வேறாகஎண்ணமிட்டு, புரியுமது-செய்யுஞ் செயல், கடன்ஓ- முறைமையானது ஆகுமோ?'என்றான்-என்றுகூறினான்:(பின்பு), ஒரு திக்கின்உம் - ஒரு திக்கிலும், வெம்பரி ஏற்றுக்கு-வேகமுள்ள குதிரையிலேறிச் சவாரி செய்வதற்கு, ஒத்தோர் இல்லா- தன்னோடொத்தவரைப்பெறாத,உரவோன் - மனவலிமையுடைய நகுலன்,- 'மருதிற்குஇடை போம் அவன் - இரட்டை மருதமரங்களினிடையேசென்ற ஸ்ரீக்ருஷ்ணனை,விரைந்துவரும் ஆறு - (இங்கே) விரைந்துவரும்படி, அழைமின்-அழையுங்கள்',என மொழிந்தான்-என்று (அப்போதுநேரஇருக்கும் ஆபத்தினின்று தப்புவதற்குஉபாயங்) கூறினான்; (எ- று.) கோவானவனும்பலபடையும் குன்றச்சென்றுபொருது இமைப்பிற்சாவாநிற்பது உறுதி என்று கூறிய வீமசேனன்பேச்சை அருச்சுனன்முறைமையன்றேஎன்று ஆட்சேபிக்க, நகுலன் ஸ்ரீக்ருஷ்ணனை அழைத்துவந்தால்நமக்கு நிகழக்கடவ இடரனைத்துந்தீருமாதலால் |