பக்கம் எண் :

392பாரதம்ஆரணிய பருவம்

பெரியஇருடியருடனே,சாக பல மூலம் - இலைகாய் கிழங்குகளைக்
கொண்ட உணவை, நுகர்ந்தாம்-உண்டிட்டோம்;என்னே என்னே-இது
என்ன தகாதசெயல்! கொன்னே முனியும் முனிக்கு-இயற்கையாகக்கோபிக்குந்
தன்மையுள்ள துருவாசமுனிவனுக்கு, இனி - இப்போது, புரிவது -
செய்யத்தக்கது,-என்கொல்ஓ-?'என - என்று எண்ணி, 'விளைவதுஎன்ஓ-
இப்போது விளையப்போவதுஎதுவோ?'என - என்றுசொல்லி, நடுநடுங்கி-
உடம்பு மிகவும்நடுக்க லெடுத்து, பயந்தாள் - அச்சங்கொண்டுநின்றாள்;
(எ- று.)

     சூரியனைத்துதித்துஅவனருளால் தருமன்பெற்ற அட்சயபாண்டம்
ஒருநாளுக்கு ஒருமுறை வேண்டும் உணவுகளையெல்லாம்
அளிக்கவல்லதாதலாலும், அவ்வாறு ஒருமுறை அட்சயபாண்டத்தினுதவியால்
அதிதியரோடு தாம் உண்டுவிட்டபடியாலும், இங்ஙனம் திரௌபதி
கூறலானாளென்க. முனிவர்கள்வரக்கூடியமாத்தியான்னிக்காலம் கடந்தபின்
நாம் உண்டிருந்தால் நாம் இப்படி இடர்ப்பட வேண்டா என்பாள்
'முனிவன்வருமுன்னே நுகர்ந்தாம்'என்றாள். நின்ற மின்னேரிடை -
இல்பொருளுவமை.                                       (622)

9.-தருமன் நினைக்கஸ்ரீகிருஷ்ணன் இருதயகமலத்தினின்று
வெளிப்படல்.

தப்போதாமற்றம்பியர்க்குந் தருமக்கொடிக்குமிதமாக
அப்போதுணரும்படியுணர்ந்தா னசோதைமகனையறத்தின்மகன்
எப்போதியாவரெவ்விடத்தி லெம்மைநினைப்பாரெனநின்ற
ஒப்போதரியானுதிட்டிரன்ற னுளப்போதிடைவந்துதித்தானே.

     (இ-ள்.) தப்புஓதாமல் - (எவர்மீதும்) ஒருபிழையையும் சொல்லி
நோவாமல், தம்பியர்க்குஉம் தருமம் கொடிக்குஉம் - தம் தம்பிமார்க்கும்
தருமத்தின் வடிவாகிக்கொடிபோல் மெல்லியவளான திரௌபதிக்கும், இதம்
ஆக - நன்மையுண்டாம்படி, அறத்தின் மகன் - தருமபுத்திரன், அப்போது
உணரும்படி - அந்தவேளையில்(அந்தஸ்ரீக்ருஷ்ணன்தம்மை) அறியும்படி,
அசோதை மகனைஉணர்ந்தான் - யசோதை வளர்த்தமகனாகிய
ஸ்ரீக்ருஷ்ணனைத்தியானித்தான்;    எ போது யாவர் எ இடத்தில் எம்மை
நினைப்பார்என நின்ற ஒப்பு ஓதுஅரியான்-எந்தவேளையில்யாவர் எந்த
இடத்தில் எம்மை நினைக்கப்போகிறார்களென்றுஅதனையே
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற ஒப்புப்பொருள்
ஓதுதற்குச்சொல்லமுடியாதபடியுள்ள அந்த ஸ்ரீக்ருஷ்ணன், உதிட்டிரன்தன் -
(தன்னைத்தியானித்த)தருமபுத்திரனுடைய, உளம் போதிடை -
இதயகமலத்தினிடத்திலிருந்து, வந்து - வெளிப்பட்டு வந்து, உதித்தான் -
தோன்றினான்;(எ - று.)

     "என்னடியார்க்கென்செய்வனென்றே யிருத்திநீ"என்றவாறு திருமால்
தன்னடியார்க்குத் தான் ஏதாவது உதவுமாறு நேர்படுமா?என்று அதனையே
எதிர்பார்த்திருப்பவ
னாதலால்,அவனை'எப்போதியாவரெவ்விடத்தில்
எம்மை நினைப்பாரெனநின்றஒப்போதரியான்'