பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்43

56. - ஆஆங்குள்ளமரங்களும்தவஞ்செய்யும் அருச்சுனனைப்
போலுமெனல்.

பூதமைந்தினையும்புலத்துடனொடுக்கிப் புரிசடையுடன்புருகூதன்,
காதலம்புதல்வனருந்தவம்புரிதல் கண்டுபாவிப்பனபோல,
மாதிரந்தொறுஞ்செம் பல்லவச்செந்தீ வளர்த்துவான்
                               மணியினைநோக்கிப்,
பாதமொன்றினினின்றுயர்ந்தனவொளிகூர் பணையுடைப்பாத
                                       வங்களுமே.

     (இ-ள்.) ஒளி கூர் பணைஉடை பாதவங்கள்உம்-ஒளிமிக்க
கிளைகளையுடைய மரங்களும்,-பூதம் ஐந்தினைஉம்-பஞ்சபூதங்களையும்
புலத்துடன் - (ஐம்பொறிகட்குஉரிய) ஐம்புலன்களோடே, ஒடுக்கி -
ஒடுங்கச்செய்து, புரி சடையுடன்-கட்டப்பட்ட சடையுடனே, புருகூதன் காதல்
அம் புதல்வன்-இந்திரனுடைய அன்பிற்குரிய அழகியபுதல்வன் [அருச்சுனன்],
அரு தவம் புரிதல் கண்டு-(செய்வதற்கு) அரிய தவத்தைச் செய்தல்கண்டு,
பாவிப்பனபோல-(தாமும் அவனை) ஒத்து நடப்பனபோல,-
மாதிரம்
தொறுஉம்-திக்குகள்தோறும், செம்பல்லவம் செந் தீ வளர்த்து-
செந்தளிராகியசெந்நிறத்தீயைமூட்டி, வான் மணியினை நோக்கி -
சூரியனைப்பார்த்துக்கொண்டு, பாதம் ஒன்றினில் நின்று - ஒரு
தாளால்நின்றுகொண்டு, உயர்ந்தன-ஓங்குதலை யடைந்தன;(எ-று.)

     நல்லாருடையசேர்க்கையினால் மற்றோரும் அந்தநல்லவரை
அனுசரிக்கப்பார்க்கும் உலகவியல்பை, மரங்களிலேற்றிக் கூறினார்.  இது-
சிலேடை மூலமாகவந்த தற்குறிப்பேற்றவணி:  இதற்குப் பல்லவச்செந்தீஎன்ற
உருவகம் அங்கமாய்வந்தது.  அருச்சுனன் நாற்புறத்திலும் நான்கு
அக்கினிகளும் வானத்திற் சூரியனாகிய அக்கினியும் ஆகப்
பஞ்சாக்கினிமத்தியிலே ஒற்றைக்காலினால்நின்று தவஞ் செய்து
ஓங்குதலையடைதல்போல, நாற்புறத்திலும் பல்லவமாகிய செந்தீயைவளர்த்து
வான்மணியினைநோக்கியவண்ணம் தமக்கு உள்ள ஒற்றைத்தாளால் நின்று
மரங்களும் ஓங்கின என்க. ஓங்குதல் - மேன்மையடைதலும்,
உயர்ந்துவளர்தலும், பாதமொன்று-ஒற்றைக்காலும் மரத்தின் அடித்தண்டும்,
பாதபம்என்ற வடசொல், பாதவம் எனத்திரிந்தது: தாளால்நீரையுண்பதுஎன
அவயவப்பொருள். பூதமைந்தினையும் புலத்துடனொடுக்குதலாவது -
ஐம்பூதங்களுக்கும் முறையே உரிய குணமான மணம் சுவை ஒளி ஊறு சத்தம்
என்கிற ஐந்து விஷயங்களையும் மெய்வாய்கண்மூக்குச் செவியென்னும்
ஐம்பொறிகளை நுகரவொட்டாது செய்தல்; கடவுளையே பற்றாசாகக்கொண்டு
புரியுந் தியானத்தில் மனம் ஐம்பொறி வழியிற் செல்லாமல்
கடவுளிடத்திலேயேசெல்வதனால் இங்ஙனங் கூறியது.               (56)

57. -அங்குள்ளவாவியும் சுனையும்தவஞ்செய்யும்
அருச்சுனனைப்போலுமெனல்.

உள்ளுறக்கலக்கமறத்தெளிந்தசலத் துயர்தலைமுழையினின்
                                        றருவி,
வெள்ளமொத்தமுதங்கரையறப்பொழிய வெம்மையற்றளி