பக்கம் எண் :

நச்சுப்பொய்கைச்சருக்கம்457

துன்புஉறாது- வருத்தமடையாமல், இரும் - இனிதிருப்பீர்,'என - என்று,
சொல்லி - (வாழ்த்துச்சொல்லைக்)கூறிவிட்டு, அன்பினால்அருள் புரிந்து -
அன்புடனே கருணைசெய்து,ஏகினான்- சென்றிட்டான்:(யாவனெனில்),-
அரியதாதை-(யுதிஷ்டிரனுடைய) அருமையான தந்தையாகிய யம
தருமராசன்;(எ-று.)

     நல்லபாம்புஎன்பதுபோல 'நல்வனம்'என்றார். தேவமானத்தால்
'நாள்'என்றது.  அகன்றது என்று பிரதிபேதம்.                 (721)

68.-தருமன்முதலியோர் யமனைவணங்கித்தம் வனத்தை
யடைதல்.

தம்பியரனைவருந்தத்தமாவிபெற்று
உம்பரிற்றலைவனாமுரியதந்தையை
வம்பவிழ்மலரடி வணங்கிநெஞ்சுடன்
அம்பகமலர்ந்துதம் மடவியெய்தினார்.

     (இ-ள்.)தம்பியர் அனைவர்உம்-தம்பிமார்கள் எல்லோரும், தம்தம் -
தங்கள் தங்களுடைய, ஆவி பெற்று - உயிரையடைந்து, உம்பரில் தலைவன்
ஆம் -தேவர்களில் தலைமைபெற்றவனாகிய,உரிய தந்தையை -
உரிமைபெற்றதந்தையாகி யமதருமனை,வம்பு அவிழ் மலர்அடி -
நறுமணம்வீசுகின்ற தாமரை மலரைப்போன்ற பாதங்களில், வணங்கி -
நமஸ்கரித்து, (மகிழ்ச்சியினால்),நெஞ்சுடன்-மனத்துடன், அம்பகம் -
கண்களும், மலர்ந்து - மலரப்பெற்று, தம் அடவி - தமக்குரிய காட்டை,
எய்தினார்- அடைந்தார்கள்;(எ-று.)

     அனைவரும்ஆவிபெற்று, வணங்கி, மலர்ந்து, அடவி எய்தினார்
என்க.  பிராணனைத்தந்தவனும் ஒரு தந்தையாவனாதலாலும்,யமதருமன்
போனஉயிரைத்தந்தவ
னாதலாலும்,அவனை'உரியதந்தை'என்றா
ரென்னலாம்.                                           (722)

69.-பாண்டவர்திரௌபதியினிடம் நிகழ்ந்தன கூறுதல்.

தீதறக்கானிடைச் செறிந்தவைவரும்
பேதுறத்தொடர்ந்தொரு பிணைபின்போனதும்
ஏதமுற்றிறந்தது மெழுந்துமீண்டதும்
ஆழ்துயர்த்திரௌபதிக் கறியக்கூறினார்.

     (இ-ள்.) தீதுஅற-(வந்த) தீமைநீங்கிவிட, கானிடை - காட்டிலே,
செறிந்த - நெருங்கிச்சேர்ந்த, ஐவர்உம்-பஞ்சபாண்டவர்கள்,-பேதுஉற-
மனக்கலக்கமுண்டாக, ஒருபிணை- ஒரு பெண்மானை,பின் தொடர்ந்து
போனதுஉம்-,-ஏதம்உற்று - (அலைச்சலால்இளைப்பும்
பெருந்தாகமெடுத்தலுமாகிய) பொல்லாங்கையடைந்து, இறந்ததுஉம் - (சுனை
நீரைப்பருகி) உயிரொழிந்ததையும், எழுந்து மீண்டதுஉம்-(யமதருமராசனால்
உயிர்பெற்று) எழுந்து மீண்டுவந்த செய்தியையும்,-ஆழ்துயர்-(சென்றவர்கள்
இன்னும் வரவில்லையே