தேவாமிருதத்தை, பருகுவார்-குடிப்பார்: உகிரால் - (தம்முடைய) நகங்களினால், மெல் மலர் கொய்து-மெல்லிய மலரைப்பறித்து,மேல் எறிவார்-ஒருவர்மீது ஒருவர் வீசுவார்: எண் உடை-(அருச்சுனனுடைய தவத்தைக் கெடுக்கவேணுமென்ற) எண்ணங்கொண்ட, மடவார்-அம்மகளிர், இ ஆறு புரிந்தன-இவ்வாறு செய்தனவாகிய, இங்கிதம்-காமக்குறிப்பையுடைய சேஷ்டைகள், எத்தனை கோடி - எத்தனை கோடிகள்! [மிகப்பலவாகும்]!! (எ-று.) மடம் என்பதைப் பெண்ணுக்கு அடைமொழியாக்கலாம். எண் உடை- நல்லெண்ணம் உடைந்த [தவிர்ந்த]எனினுமாம். (63) 64.-மன்மதன்அருச்சுனன்மீது பலமுறை அம்பெய்து இளைத்தல். காவும்வண்புறவுங்கயங்களுமரும்பக் கவர்ந்தவெங்கணைகளா மைந்து, பூவும்வந்துள்ளமுறவுறப்பட்டுப்புதையவும் புலன்வழியின்றி, மேவுதன்கருத்தின் வழியிலேநின்றவிசயனையங்கிபால்வில்லும், ஏவுமுன்பெற்றவிறைவனையெய்தெய்திளைத்தனனிரதிகேள் வனுமே. |
(இ-ள்.)காஉம்-சோலைகளும், வண் புறவுஉம்-வளப்பமுள்ள காடுகளும், கயங்களும்-நீர்நிலைகளும், அரும்ப-(அசோகுமுல்லை மா தாமரை குவளை என்ற இவைகளைத்)தோற்றுவிக்க,-கவர்ந்த- (அவற்றினின்றும்மன்மதன்)பறித்தெடுத்த, வெம் கணைகள் ஆம் ஐந்துபூஉம்-வெவ்விய பாணங்களாகிய ஐந்து மலர்களும், வந்து- (கரும்புவில்லினின்றும்வெளிப்பட்டு)வந்து, உள்ளம் - (அருச்சுனனுடைய) மனத்திலே, உற உறபட்டு புதையஉம்-மிகவும் நன்றாகப் பதிந்து புதையவும்,-புலன்வழிஅன்றி-புலன்களின் வழியிலேயல்லாமல், மேவு- பொருந்திய, தன் கருத்தின் வழியில்ஏ-தன் எண்ணத்தின் வழியில்தானே, நின்ற-நிலையாகநின்ற, விசயனை-அருச்சுனனை, அங்கிபால் - அக்கினிதேவனிடத்திலே, வில்உம் - காண்டீவமென்ற வில்லையும், ஏஉம்- அம்புகளையும், முன்-முன்னே [காண்டவதகன காலத்திலே], பெற்ற- அடைந்த, இறைவனை-தலைவனை, எய்துஎய்து-பலமுறை அம்புதொடுத்து எய்து, இரதிகேள்வன்உம்-இரதீதேவிக்குக் கணவனாகிய மன்மதனும், இளைத்தனன்-இளைத்தான்; (எ- று.) மன்மதனுக்குக் கணைகளாக அமையும் அரவிந்தம் முதலிய ஐம்மலர்கள் கா முதலிய இடங்களில் தோன்றுவன வாதலால், 'காவும் வண்புறவும் கயங்களும் அரும்ப'என்றார். ஐம்புலவாசையையொறுத்துத் தியானத்தில்தானே மனமூன்றியிருந்தனன் அருச்சுன னென்க. 'ஐங்கணைகளாம்'என்றும் பாடம். (64) 65.-அருச்சுனன்சிவத்தியானங்கொண்டு சலியாது நிற்றல். கூற்றினையுதைத்த பாதமுமுடுத்த குஞ்சரத்துரிவையுமணிந்த, நீற்றொளிபரந்துநிலவெழுவடிவு நிலாவெயிலனலுமிழ்விழியும், ஆற்றறல்பரந்தகொன்றைவார்சடையுமல்லதையாவையுங் கருதான், மாற்றமொன்றின்றிநின்றனன்வரைபோல்வச்சிராயுதன்றிரு மகனும். |
|