பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்51

அருச்சுனனது கருத்து, யாவது - எத்தன்மையது, என்று-,இனிதின்
எண்ணி-நன்றாக அறிந்துகொண்டு,-எய்தி- (தேவலோகத்துக்குச்)சென்று,
இந்திரநீலம்தன்னில் இறைவனுக்கு - இந்திரநீலரத்தினம்போலக்
கருநிறத்தையுடைய இந்திரனுக்கு, உரைத்தார் - (செய்தியைச்)சொன்னார்:
அந்த இந்திரன்தான்உம்-அந்த இந்திரனும், மைந்தன் தவம் புரி இருக்கை -
(தனது)குமாரன் தவஞ்செய்யுமிடத்தை, சேர்ந்தான்-;(எ-று.)

     இந்திரசாலம் - உள்ளதை இல்லாததாகவும் இல்லாததையுள்ளதாகவும்,
ஒன்றை மற்றொன்றாகவுங் காட்டும் மாயவித்தை, இனி, இந்திரசாலமாகஎய்தி
என்பதற்கு - இந்திரசாலவித்தையை ஒப்ப இருந்தவிடந்தெரியாதபடி
மீண்டுவந்து என்றும் உரைக்கலாம்.  இந்திரநீலம் - ஒருவகைநீலரத்தினம்.
இந்திரநிலமென்பது இந்திரநீலமெனத் திரிந்ததாகக்கொண்டு
இந்திரநீலந்தன்னில் இறைவன் - பொன்னுலகத்திலுள்ள தலைவனான
இந்திரன் என்றாரு முளர்.

     இதுமுதல்ஏழுகவிகள் - இச்சருக்கத்தின் முதற்கவிபோன்ற
அறுசீராசிரிய விருத்தங்கள்.                                (68)

69.-இதுவும்,மேற்கவியும் - குளகம்:வினவிய இந்திரனுக்கு
அருச்சுனன் தவஞ்செய்யுங்காரணங்கூற,
அவ்விந்திரன் இகழ்ந்து சிரித்தலைக் கூறும்.

விருத்தமாமுனிவனாகி விசயனைநோக்கியாது
கருத்துநீதவஞ்செய்கின்ற காரணமென்னையென்னத்
திருத்தகுசிந்தையோடுஞ் செந்தழலிடைநின்றோனும்
மருத்துவனுருவமாறி வந்தவாறுணர்கிலாதான்.

                   இரண்டு கவிகள் - ஒரு தொடர்.

     (இ-ள்.) (தேவேந்திரன்),-விருத்தன்மா முனிவன் ஆகி -
கிழத்தனமுடையவனாகிய ஒருபெரிய இருடியினுடைய உருவமாய் வந்து,
விசயனை நோக்கி-அருச்சுனனைப் பார்த்து, 'யாதுகருத்து-(உன்னுடைய)
எண்ணம் என்ன?  நீ தவம் செய்கின்ற காரணம் என்னை - நீ தவத்தைச்
செய்கிற காரணம் யாது?',என்ன - என்று வினாவ,-திரு தகு
சிந்தையோடுஉம்-மேன்மைபொருந்திய உள்ளக் கருத்துடனே, செம் தழல்
இடை நின்றோன்உம் - சிவந்த அக்கினியின் மத்தியிலே நின்று
தவஞ்செய்கின்ற அருச்சுனனும், மருத்துவன் உருவம் மாறி வந்த ஆறு
உணர்கிலாதான் - இந்திரன்(தன்னுடைய)ரூபம் மாறுபட்டு வந்த விதத்தை
அறியாதவனாய்,-(எ-று.)"என்ன,தேவர்கோமான் சிரித்தனன்" என்று
அடுத்த செய்யுளில் முடியும்.

     தேவேந்திரன் தனது புதல்வனான அருச்சுனனிடத்திலுள்ள அன்பின்
மிகுதியால் அவனுடைய மனவுறுதியை நன்றாக உணரக்கருதி
ஒருகிழமுனிவனது வடிவத்தைக் கொண்டு அருச்சுன