பைம்பொற், காலிணையிற்செருப்பணிந்துசெய்யதிருவடிவுமிகக் கரியனானான். |
(இ-ள்.)(பரமசிவன்),நீலம் மணி திரு கண்டம்-நீலரத்தினம் போலக்கறுத்த (தமது)கழுத்திலே, நிலவுஎழ - சந்திரகாந்தி போன்ற ஒளியுண்டாம்படி, பலகறை பூண் - பலகறைகளாகிய ஆபரணத்தை, நிறைய- நிரம்ப, கட்டி - தரித்து,-கோலம்மணி குழைகளின்உம்-அழகிய இரத்தினங்களைப்பதித்துச்செய்தகுண்டலங்களைக்காட்டிலும், குழை ஆக - சிறந்த குண்டலமாம்படி, பிணையல்மலர் - தொடுத்த சிலமலர்களை, கொண்டு சாத்தி-எடுத்து (க்காதிலே)அணிந்து, சேலைஎன- ஆடையாக, புலி அதள்உம்-புலித்தோலையும்,திரு மருங்கில்-அழகிய இடையிலே, உற சேர்த்தி-நன்றாகஇறுகக்கட்டி,-செய்யபைம்பொன்-சிவந்த பசும் பொன்னாபரணங்களையணிந்த, கால்இணையில்- இரண்டு திருவடிகளிலும், செருப்பு அணிந்து-செருப்பைத்தரித்து, செய்ய திரு வடிவு மிக கரியன் ஆனான்-சிவந்த(தமது)அழகிய வடிவம் மிகவுங் கறுத்தவனானான்; (எ-று.)
பிணையல்-பின்னியமாலை: தொழிலாகுபெயர். "செம்பொன் னெழுத்திட்டதேபோல்" என்பதிற்போல, 'செய்யபைம்பொன்' என்ற இடத்தும் செம்மை பசுமை வருணத்தின் வேறுபாட்டைக் காட்டவில்லை. பொன்-ஆபரணத்துக்கு ஆகுபெயர். (83) 84.-கவிக்கூற்று: சிவபிரான்கொண்ட வேட்டுவவேடச் சிறப்பு. இடக்கைமலர்வரிசிலையும்வலக்கைமலர்ப்பாணமும்வெந்நிடை யேபாணம், அடக்கியவெங்கொடுவரித்தோ லாவநாழிகையுமிகவழகு கூரக், கடக்களிறன்றுரித்தபிரான் கண்டவர்கள் வெருவரமுன் கொண் டகோலந், தொடக்கியுரைசெயநினைக்கிலாயிரநாவுடையோற்குஞ் சொல்ல லாமோ. |
(இ-ள்.)கடம் களிறு அன்று உரித்த பிரான் - மதயானையை முன்னொருகாலத்தில்தோலுரித்த சிவபிரான், இடம் கை மலர் - தாமரைமலர் போலும் (தமது)இடக்கையில், வரி சிலைஉம்- கட்டமைந்த வில்லும், வலம் கை மலர் - தாமரைமலர்போலும் (தமது)வலக் கையில், பாணம்உம்-அம்பும், வெந் இடையே - முதுகிலே, பாணம் அடக்கிய வெம் கொடுவரி தோல் ஆவம் நாழிகைஉம் - பாணங்களை(த்தன்னுள்ளே) யடக்கிவைத்துக் கொண்டுள்ள கொடியபுலியின் தோலாலாகிய அம்பறாத்தூணியும,்மிக அழகு கூர - மிகவும் அழகைப் பொருந்தவும், கண்டவர்கள் வெருவர - பார்த்தவர்கள் அஞ்சும்படியாகவும், முன் - விரைவாக, கொண்ட - எடுத்துக் கொண்ட, கோலம் - வேடவேஷத்தை, தொடக்கி உரைசெய நினைக்கில்- ஆரம்பித்துச் சொல்ல நினைத்தால்,- ஆஆயிரம் நாஉடையோற்குஉம் - ஆயிரம் நாவையுடைய ஆதிசேஷனுக்கும், சொல்லல் ஆம் ஓ-சொல்லுதற்கு முடியுமோ? [முடியாது];(எ-று.) |