பக்கம் எண் :

72பாரதம்ஆரணிய பருவம்

    'இவன், நான்தான் இதனைக்கொன்று வீழ்த்தினேனென்று உரிமை
பாராட்டி இப்பன்றியை எடுத்துக்கொண்டு போய்விடுவானோ என்று
அஞ்சவேண்டா; நீ இதனைக்கொண்டுபோனால் உனக்கும் உன்
சேனைகட்கும் உணவாகும்; நீ எடுத்துக்கொண்டு போகலாம்;
இனிப்படைவலிமை யுள்ளதென்று வீண்சண்டைக்கு இழுத்தால், நான்
சும்மாவிடமாட்டேன்; உங்கள் தலையெல்லாம் பலதிக்குக்களிலும் சிதறி
விழும்படி கொடுங்கணை விடுவேன்' என்று அருச்சுனன் வீரவாதம்
கூறினனென்பதாம்.  தன்னுடை யாற்றலுணராரிடைத் தன்னைப்புகழ்தல்
தகுமாதலால், இவ்வாறு அருச்சுனன் தன்னைப் புகழ்ந்து கூறினானென்க.
உண்டி-உண்ணப்படுவது; ட் - எழுத்துப்பேறு.  இ - செயப்படுபொருள்விகுதி.
வலிமைகொண்டு, கொண்டு-மூன்றாம்வேற்றுமைச் சொல்லுருபு. அலால் -
குறிப்புவினையெச்சம். குறும்பொறை - குறிஞ்சிநிலத்தூரென்பாருமுளர்.   (94)

வேறு.

95.-'நீபன்றியைக்கொன்றது தகுதியோ?'என்று வேடன்
வினாவல்.

என்றமொழி செவிப்படலு மெயினர்க் கெல்லா மிறைவனாகிய
                         வெயின னிவனை நோக்கிப்,
பன்றிபெரு மோகரத்தோ டின்றுன்னாவிபருகியிடு மெனமிகவும்
                                   பயப்பட்டாயோ,
நின்றுபெருந் தவமுயல்வோர்தாங்கள் கொண்ட
        நினைவொழியப் புறத்தொன்று நினைவரோ சொல்,
பொன்றிடினு நீயறியப் பசுத்தோல் போர்த்துப் புலிப்பாய்ச்சல்
                            பாய் வரோபுரிவிலாதாய்.

     (இ-ள்.)என்ற மொழி-என்று (அருச்சுனன்)சொன்ன வார்த்தை, செவி
படலும்-காதிற் கேட்டவுடனே, எயினர்க்கு எல்லாம் இறைவன் ஆகிய
எயினன்-வேடர்களுக்கெல்லாம் அரசனாகிய சிவ வேடன்,-இவனை
நோக்கி-அருச்சுனனைநோக்கி,-புரிவுஇலாதாய்-மெய்யன்பில்லாதவனே!(நீ),
பன்றி-,பெரு மோகரத்தோடு-பெரிய ஆரவாரத்தோடு, இன்று-இன்றைக்கு,
உன் ஆவி பருகியிடும்-உனது உயிரை உண்டுவிடும், என-என்று, மிகவும்
பயப்பட்டாயோ-? நின்று-நிலைநின்று, பெரு தவம் முயல்வோர்-பெரிய
தவத்தைச் செய்பவர்கள், பொன்றிடின்உம்-(தாம்)இறக்க நேர்ந்தாலும்,
தாங்கள் கொண்ட நினைவு ஒழிய-தாம் கொண்ட எண்ணத்தைத் தவிர,
புறத்து ஒன்று-வேறாகிய ஒன்றை, நினைவர்ஓ-நினைப்பார்களோ?
[நினைக்கமாட்டார்களன்றோ],நீ-,அறிய-தெரியுமாறு, சொல்-சொல்வாயாக:
பசு தோல் போர்த்து - பசுவினுடைய தோலை மேலே போர்த்துக்கொண்டு,
புலி பாய்ச்சல் பாய்வர்ஓ-புலிபாய்வதுபோன்ற பாய்ச்சலைப் பாய்வார்களோ?

     இதனால், வேடவடிவங்கொண்ட சிவபிரான் அருச்சுனனை
ஏசினனென்க.  பிறரால் தமக்குத் துன்பம் நேராதிருத்தற்