பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்73

பொருட்டுத் தவவேடம் பூண்டு, காரியகாலத்தில் அத்தன்மை கொள்ளாது
ஒழுகுகின்றவர்க்கு, தன்னை எவரும் நெருங்கித் துன்பஞ்செய்யா
திருத்தற்பொருட்டுச் சாதுவான பசுவின் தோலைப் போர்த்துக்கொண்டு
யாவரையும் ஏமாற்றித் தக்க காலத்தில் தனது இரைப்பொருள்மேல் தாவி
விழுகின்ற புலி ஏற்றஉவமையாதல் காண்க.  'பசுத்தோல்போர்த்துப்
புலிப்பாய்ச்சல் பாய்கிறான்' என்ற பழமொழியைத்
தன்னுள்கொண்டிருப்பதனால், இச்செய்யுள்-உலகவழக்குநவிற்சியணியாம்;
சாந்தமான தவவேடத்தை மேற்கொண்டு குரூரமான போர்த்தொழிலை
எவருஞ் செய்யாரென்னுங் கருத்தை உபமானமுகத்தாற் கூறியது
பிறிதுமொழிதலணியாம்.  "வலியினிலைமையான்வல்லுருவம்பெற்றம்,
புலியின்றோல்போர்த்துமேய்ந்தற்று" 
என்ற குறளை, இங்குக் காண்க.

     எயினனென்பதன் பெண்பன்மை-எயிற்றியரென்பது.  மோகரம்-
முகரமென்ற வடசொல்லின்சிதை வென்னலாம்.  உயிர் பருகியிடும்-
உண்டற்குரிய வல்லாப்பொருளை உண்டதுபோலக் கூறிய உபசார வழக்கு.
நீ அறியச் சொல் - நீ உன் மனச்சாட்சியாகச்சொல் எனவுமாம்.

     இது முதல் எட்டுக் கவிகள் - ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ் சீர்கள்
காய்ச்சீர்களும், மற்றவை மாச்சீர்களுமாகிவந்த எண்சீராசிரியவிருத்தங்கள்.
                                                       (95)

96.-சிவபெருமான்அருச்சுனனை விசாரிக்க, அவனும்
தன்னைத் தெரிவித்தல்.

மறையவனோவொருகுடைக்கீழ்வையங்காக்கு மன்னவனோவை
                               சியனோவடிவமாறிப்,
பொறையுடனேதவம்புரியமவுணர்மாக்கள்புத்தேளிர்நிருதரிலோர்
                                    புறத்துளானோ,
நிறைவுடன்மெய்ப்பிறைபோலவடிவந்தேய்ந்துநெருப்பிடை
                         நீநிற்கின்றாய்நெடுநாளுண்டு,
குறையுனக்கியாதுரையென்றானென்றபோதக்குருகுலநாதனுந்
                              தன்னைக் கூறினானே.

    (இ-ள்.) நீ-, மறையவன்ஓ-பிராமணனோ?  ஒரு குடை கீழ் வையம்
காக்கும் மன்னவன்ஓ-ஒற்றைவெண்கொற்றக் குடைநிழலிலிருந்து பூமியை
ஆளுகின்ற அரசனோ?  வைசியன்ஓ - வணிகனோ?  வடிவம் மாறி -
உருவம் மாறுபட்டு, பொறையுடன்ஏ - பொறுமையோடு, தவம் புரியும்-
தவத்தைச் செய்கின்ற, அவுணர்-அசுரர்களும், மாக்கள் - மனிதர்களும்,
புத்தேளிர் - தேவர்களும், நிருதரில்-அரக்கருமாகிய இவர்களுள், ஓர்
புறத்து உளான்ஓ - ஒருபகுப்பிலுள்ளவனோ?  நிறைவுடன் - (தவத்திற்கு
உரிய லக்ஷணத்தின்) நிறைவோடு, பிறை மெய் போல வடிவம் தேய்ந்து -
சந்திரனது உருவம்போல நாளுக்குநாள் உடம்பு இளைத்து, நெருப்பு இடை-
அக்கினியின் மத்தியிலே, நெடு நாள் உண்டு - பலநாளாக, நிற்கின்றாய்-
தவஞ்செய்து நிற்கிறாய்; (நீ இவ்வாறு தவஞ்செய்ய), உனக்கு-, குறை யாது-
(ஒழிக்க வேண்டிய) குறை என்ன?  உரை-