பக்கம் எண் :

84பாரதம்ஆரணிய பருவம்

வும்,-மதியின்கொழுந்து அமுது - (முடியிலுள்ள)இளஞ்சந்திரனது
அமிருதம், சோர - சிந்தவும்,-விடம்நாகர் சுடிகை தலை - (தலையில்
அணியும் ஆபரணமாயுள்ள)விஷத்தையுடைய சர்ப்பங்களது
உச்சிக்கொண்டையையுடைய தலைகள், குலைந்து - பதைத்து, மணி சிந்த -
(அவற்றிலுள்ள)மாணிக்கங்கள் சிதறவும், நதியாள் - (திருமுடியிலுள்ள)
கங்காநதி, எழுந்து - இருப்பிடம்விட்டெழுந்து, தடுமாறி - நிலைகுலைந்து,
அகல் வானில் உற - பரந்த ஆகாயத்திற் பொருந்தவும், (இவ்வாறு),
வேடனும்-,இளைத்து - மெலிந்து, அவசம் உற்றனன் - தன்வசமழிந்து
பரவசமடைந்தான்;(எ-று.)

     அருச்சுனன் விற்கொண்டு பொருதற்கு வழியில்லாமையால் அவ்விற்
கழுந்துகொண்டு சிவபிரானது முடியில் தாக்க, அப்போது அச்சிவபிரான்
முடியிலணிந்திருந்த மயிற்பீலி பிறைச்சந்திரன் நாகாபரணம் ஆகாசகங்கை
என்ற யாவும் நிலைகுலைய, அப்பிரானும் தனது திருவருளினால் அந்த
அடிக்குத் தாங்காதவன் போலச் சோர்வுற்றன னென்பதாம். உழுந்து -
தினை எள் என்பன போல மிக்க சிறுமைக்கு எடுத்துக்காட்டுவதொரு
அளவை.  விற்கழுந்து - தநுர்த்தண்டம்.  மோதுதலாகிய காரணத்தின்
முன்பீலி இழத்தல் முதலிய காரியங்களை நிகழ்ந்தனவாகச் சொல்லியது,
மிகையுயர்வுநவிற்சியணி;இது - காரியவிரைவைச் சொல்வது.  இழந்தது -
முற்றெச்சம்;அவச முற்றனன் என்பதனோடு முடிந்தது;இதனை
எச்சமாக்காமல் முற்றாகவே கொண்டு பொருளுரைத்தால், ஏகவாக்கியமாகாது
பின்னவாக்கியமாகிப் பொருள் சித்தியாதென்க.  கொழுந்து - இளமை.
கொழுந்துமதியென மாற்றுக.  நதி  - வடமொழியிற் பெண்பாற்சொல்;
ஆதலால், அத்தன்மை தோன்ற, 'நதியாள்'என்றார்.  வேடனும், உம் -
இறந்ததுதழுவிய எச்சம்;கீழ் அருச்சுன னிளைத்தானென்பதை
நோக்கியதனால்: இனி, உயர்வுசிறப்பெனவுங் கூறலாம்.            (106)

107.-இதுவும்அடுத்த கவியும் -
சிவபிரானடியுண்டதனால் யாவும் அடியுண்டமையைத்
தெரிவிக்கும்.

விண்ணிலுறைவானவரில்யாரடிபடாதவர் விரிஞ்சனரியே
                                  முதலினோர்,
மண்ணிலுறைமானவரில் யாரடிபடாதவர் மனுக்கண்
                              முதலோர்களதலக்,
கண்ணிலுறைநாகர்களில்யாரடிபடாதவர்கள் கட்
                           செவிமகீபன்முதலோர்,
எண்ணில்பலயோனியிலும்யாவடிபடாதன
                         விருந்துழியிருந்துழியரோ.

     (இ-ள்.)(சிவபிரான்அருச்சுனனது வில்லின் தண்டத்தால் முடியில்
அடிபட்டபொழுது),
விரிஞ்சன் அரிஏ முதலினோர் - பிரமன் திருமால்
முதலியவர்களாகி, விண்ணில்உறை வானவரில்-மேலுலகத்தில் வசிக்கின்ற
தேவஜாதியர்களுள், அடிபடாதவர் - அவ்வடியை யேற்காதவர், யார் -
எவருளர்?  [எவருமிலர்: யாவருமேற்றார் என்றபடி];மனுக்கள்
முதலோர்கள் - மனுக்கள் முதலிய