பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்85

வர்களாகிய, மண்ணில் உறை மானவரில் - பூலோகத்தில் வசிக்கின்ற
மனிதர்களுள், அடி படாதவர் யார்-? கட்செவி மகீபன் முதலோர் -
பாம்புகளுக்கு அரசனாகிய ஆதிசேஷன் முதலியவர்களாகிய, அதலம்
கண்ணில் உறை நாகர்களில் - பாதாள லோகத்தில் வசிக்கிற நாகர்களுள்,
அடிபடாதவர்கள் யார்-? எண் இல் பல யோனியில்உம் - கணக்கில்லாத
மற்றும் பல பிறப்புக்களிலும், இருந்துழி இருந்துழி - (தாந்தாம்)இருந்த
இருந்த இடங்களில், யா-எவை, அடிபடாதன-? (எ-று.)

     இதனாலும், மேற்கவியாலும், எல்லாவுயிர்களுக்கும் உயிராயுள்ள
இறைவனது ஜகச்சரீரகத்துவங் கூறுகிறார்.  "பரிதியுமதியும்
பாம்புமைகோளும் பன்னிறம்படைத்த நாண் மீனும், இரு நிலம்புனல்
காலெரிகடுங்கனல்வா னென்னுமைம் பூதமுங் காருஞ்,
சுருதியுமாறுசமயமானவருஞ் சுரர்களு முனிவருந்  தொண்டின், மருவிய
முனிவர் கணங்களும் பட்ட மதுரைநாயகனடித் தழும்பு," "வானவர்மனிதர்
நரகர்புள் விலங்கு மாசுணஞ்சிதலெறும் பாதி, ஆனபல் சரமு மலைமரங்
கொடிபுல் லாதியா மசரமும்பட்ட, ஊனடைகருவும் பட்டன தழும்போ
டுதித்தன வுயிரிலோவியமும், தானடிபட்ட சராசர சடங்கள் தமக்குயி
ராயினோன் தழும்பு," "துண்ணெனமாயோன் விழித்தனன் கமலச்
சோதியும் யாதென வியந்தான், விண்ணவர் பெருமான் வெருவினான்
வானோர் வேறுளார் மெய்ப்பனிப் படைந்தார், வண்ணயா ழியக்கர்
சித்தர்சாரணர்தம் வடுப்படா வுடம்பினிற்பட்ட, புண்ணையா தென்று தத்தமிற்
காட்டி மயங்கினார் புகுந்தவா றறியார்"என்னுந் திருவிளையாடற்
செய்யுட்களையும், "அம்மாநம்மேலன்று பட்டதருட்கூடற்,
பெம்மான்மேற்பட்ட பிரம்படியே"என்னும் மதுரைக்கலம்பகக் கவியையும்
இங்கே நோக்குக.

     அரி - ஹரி;(தன்னைஅடைந்தவர்களின் துன்பங்களைப்)
போக்குகிறவன்;அல்லது, (அசுரர்முதலியபகைவர்களை)அழிப்பவன். அரி
என்பதற்கு - இங்கே இந்திரனென்று பொருள்கூறுவர் ஒருசாரார்.  மானவர்
- மனுவின் சந்ததியார்.  மனுக்கள் - சுவாயம்புவன், சுவாரோசிஷன்,
உத்தமன், தாமசன், இரைவதன்,  சாக்ஷு ஷன்,  வைவசுவதன் எனப்படுகிற
சிறந்த சக்கரவர்த்திகள்.  யோனி என்றது - மிருகம், பட்சி, ஊர்வன,
நீர்வாழ்வன முதலிய பிறப்புடையவற்றை.                    (107)

108.வேதமடியுண்டனவிரிந்தபலவாகமவிதங்களடியுண்டன
                                 வொரைம்,
பூதமடியுண்டனவிநாழிகைமுதற்புகல்செய்பொழுதொடு
                         சலிப்பில்பொருளின்,
பேதமடியுண்டன பிறப்பிலியிறப்பிலி பிறங்கலர
                             சன்றன்மகளார்,
நாதனமலன்சமர வேடவடிவங்கொடு நரன்கையடி
                            யுண்டபொழுதே.

     (இ-ள்.)பிறப்பு இலி - பிறத்தலில்லாதவனும், இறப்புஇலி-
இறத்தலில்லாதவனும், பிறங்கல் அரசன் தன் மகளார் நாதன் -
பர்வதராஜனாகிய இமவானது குமாரியான உமாதேவியினது கணவ