ஆறு கவிகள் -ஒருதொடர். (இ-ள்.)செழு - மிகுந்த, சுடர் - ஒளியையுடைய, மணி - மாணிக்கத்தையுடைய, பணி - சர்ப்பங்களையும்,திங்கள் - பிறைச்சந்திரனையுமணிந்த,மௌலியாய் - திருமுடியுடையவனே! அருவினையினின்- (கடப்பதற்கு)அருமையான கருமங்களால், அழுந்திய பிறவியின் விழுந்து - தாழ்வான பிறப்புக்களிலே வீழ்ந்து, நாயின்உம் மெலிந்து - நாயைக் காட்டிலுங் கடைப்பட்டு, அயருவேன் முனம் - வருந்துகின்ற அடியேனது எதிரில், எழுந்தருளிய - வந்து தரிசனம் தந்தருளிய, இஃது - இச்செயல், என்ன மாயம்ஓ-என்ன ஆச்சரியமோ! (எ-று.) தீவினைபோலநல்வினையும்பிறப்புக்குக் காரணமாதலால், உயிரைப் பந்தப்படுத்துவதிற் பொன்விலங்கும் இருப்புவிலங்கும் போல நல்வினையும் தீவினையும்தம்முள் ஒப்பனவா மென்க. (117) 118. | ஆதியேயண்டமு மனைத்துமாயொளிர் சோதியேகொன்றையந் தொங்கன்மௌலியாய் வாதியேமரகத வல்லியாளொரு பாதியேபவளமாம்பரமரூபியே. |
(இ-ள்.) ஆதியே - (எல்லாப்பொருள்களுக்கும்) முதன்மையானவனே! அண்டம்உம் - உலக வுருண்டைகளும், அனைத்துஉம் - (அவற்றிலுள்ள) சராசரப்பொருள்களெல்லாமும், ஆய் - ஆகி, ஒளிர் - விளங்குகின்ற, சோதியே - ஒளியுருவானவனே! கொன்றை - கொன்றை மலர்களாலாகிய, அம் - அழகிய, தொங்கல் - திருமாலையைச்சூடிய, மௌலியாய் - முடியை யுடையவனே! வாதியே - பேசவல்லவனே! மரகதவல்லியாள் - மரகத ரத்தின மயமான பூங்கொடி போன்ற உமாதேவியை, ஒருபாதியே - இடப்பாகத்திலுடையவனே! பவளம் ஆம் பரம ரூபியே - (வலப்பாகம்) பவழ மயமான சிறந்த வடிவமுடையவனே! (எ-று.) தொங்கல்-தொங்குவதாகிய மாலை. வாதிஎன்பது - ஸர்வஜ்ஞனென்பது தோன்ற நின்றது. (118) 119. | பையராவணிமணிப் பவளமேனியாய் செய்யவாய்மரகதச்செல்விபாகனே ஐயனேசேவடியடைந்தவர்க்கெலாம் மெய்யனேயெங்குமாய்விளங்குஞ்சோதியே. |
(இ-ள்.) பை-படத்தையுடைய, அரா-நாகங்களை, அணி - ஆபரணமாகத் தரித்த, மணி-அழகிய, பவளம் மேனியாய் - பவழம்போற் சிவந்த திருமேனியையுடையவனே! செய்ய வாய்-சிவந்த வாயையுடைய, மரகதம் - மரகதரத்தினம்போற் பசுநிறமான, செல்வி- எல்லாச் செல்வங்களுமுடைய அம்பிகையை, பாகனே-இடப்பக்கத்திற் கொண்டவனே! ஐயனே - தலைவனே! சே அடி அடைந்தவர்க்கு எலாம்-சிவந்த திருவடிகளைச் சரணமடைந்த |