(இ-ள்.)விசயன்உம்-அருச்சுனனும், பெற்றனன்-(அவற்றையெல்லாம்) பெற்றுக்கொண்டான்;(அதன்பின்பு),கற்றை அம் சடையவன்- தொகுதியாகிய அழகிய சடையையுடைய பரமசிவன், சுற்றிய-(தம்மைச்) சுற்றிலுமுள்ள, பேய்உம்-பேய்களும், பூதம்உம்-பூதங்களும், கணங்கள்உம்- மற்றைப் பிரமத கணங்களும், சுருதி ஓசைஉம்-வேதங்களின் கோஷமும், வெற்றி கொள்பெற்றம்உம்-மேன்மையைக் கொண்ட நந்தியும், விழைந்து சூழ-விரும்பிச் சூழ்ந்துவராநிற்க, கயிலைஏகினான்-கைலாசத்துக்குச் சென்றருளினார்;(எ-று.) ஆனினத்தின் ஆணையும்பெண்ணையும்உணர்த்தும் பெற்றம் என்பது - தென்பாண்டிநாட்டினின்று தமிழில் வந்து வழங்கிய திசைச்சொல்லாம். காலத்திற் சிவபிரானுக்கு வாகனமான ருஷபமாதல்பற்றி, நந்திதேவரை 'பெற்றம்'என்றார். ஈற்றடியில், கற்றவருடையவன் என்றும் பாடம். (130) 131.-இதுமுதல்,மூன்றுகவிகள் - ஒருதொடர்: தேவேந்திரன்வானத்தினின்று வந்து அருச்சுனனை வாழ்த்தித்தன்தேரின்மேற் கொண்டு வானுலகத்து அழைத்துப்போதலைக்கூறும். ஏகியபின்னரா யிரங்கணாதனும் மோகரதுந்துபி முழங்கத்தேரின்மேல் நாகருமுனிவரு நண்ணிவாழ்த்தவே வாகைகொள்விசயனைவந்துபுல்லியே. |
(இ-ள்.)ஏகிய பின்னர் - (சிவன்)சென்றபின்பு, ஆயிரம்கண் நாதன்உம் - ஆயிரங் கண்களுடைய (தேவர்)தலைவனானஇந்திரனும் மோகரம் துந்துபி முழங்க - பேரொலியைச் செய்கின்ற துந்துபி யென்னும் வாத்தியங்கள் ஒலிக்கவும், நாகர்உம் முனிவர் உம் நண்ணி வாழ்த்த- தேவர்களும் முனிவர்களும் நெருங்கி வாழ்த்துச் சொல்லாநிற்கவும், தேரின்மேல் வந்து - (தனது)தேரில் ஏறிவந்து, வாகை கொள் விசயனை வெற்றியைக்கொண்ட அருச்சுனனை,புல்லி - தழுவிக்கொண்டு,- (எ- று.) - மேல் 133 -ஆங் கவியில் 'ஏற்றி'என்பதனோடுஇயையும். 132 - ஆங்கவி, இடைப் பிறவரல். வாகை யென்னும்மரத்தின் பெயர் - அதன் பூவினாலாகியமாலையை இருமடியாகுபெயராற் குறித்துப் பின்பு இலக்கணையால், அம்மாலையையடையாளமாகச்சூடுகிற வெற்றியை யுணர்த்திற்று. துந்துபி - ஒருபறை. (131) 132. | நீபுரிதவப்பய னீடுவாழியே சாபமுந்தூணியுஞ்சரமும்வாழியே தீபமெய்யொளியுடன்சேர்ந்துபோர்செயும் மாபெருநீலமெய்வாழிவாழியே. |
|