பக்கம் எண் :

134பாரதம்உத்தியோக பருவம்

ஒன்று முறைமை யுணராதவர்மகளிர்
என்று மிவர்மந்தணத்தினெய்தப் பெறாதாரே.

இதுவும்,அடுத்தகவியும் - குளகம்:   இக்கவி - தருமன் வார்த்தை.

     (இ -ள்.) துன்று பிணியோர் - மிக்க நோயை யுடையவர்களும்,
துறந்தோர் - (பற்றுக்களை முற்றத்) துறந்தவர்களும், அடங்காதோர் -
வணக்கமில்லாதவர்களும், கன்று சினம் மனத்தோர் - தபிக்கிற [மிக்க]
கோபத்தையுடைய மனத்தையுடையவர்களும், கல்லாதவர் - படியாதவர்களும்,
இளையோர் - சிறுபிள்ளைகளும், முறைமை ஒன்றும் உணராதவர் - நீதியைச்
சிறிதும் அறியாதவர்களும், மகளிர் - மாதர்களும், இவர் - என்கிற இவர்கள்,-
என்றும் - எப்பொழுதும், மந்தணத்தின் - ஆலோசனை செய்யுமிடத்தில், எய்த
பெறாதாரே - வருதற்குத் தகுதியில்லாதவரேயாவர்; (எ - று.) - 'என்னக்கழறி'
என அடுத்த கவியோடு தொடரும்.  ஈற்று ஏகாரம் - தேற்றம்.

    தன்கருத்தின்படி கண்ணன் நடப்பதைத் திரௌபதி இடையில் வந்து
தடுத்து மனத்தை மாற்றுவதுபற்றி வெறுப்புக் கொண்ட தருமபுத்திரன், மகளிர்
ஆலோசனையிடத்துவருதலைத் தடுக்கவேண்டி, அவ்விஷயத்தில் அவர்க்கு
இனமாய் நிற்பவரையும் உடன்கூறினானென்க.  மிக்க நோயாளிகள் முதலிய
இவர்கள், ஆய்ந்து செய்வன தவிர்வன அறிந்து பேசிமுடித்து ஒழுகாராதலால்,
மந்திராலோசனைச் சபையில் வரவுந் தகாதவராவர்.  உலகப்பற்றுக்களைத்
துறந்தவர்கள், மிகக்கூரிய நுண்ணறிவுடையாராயினும், இம்மையில் ஒருவர்க்கு
நேரும் இலாபநஷ்டங்களை ஊன்றிக் கருதிப் பெறவும் ஒழிக்கவுஞ் செய்யும்
முயற்சிகளில், கடவுட்சிந்தனையிலழுந்துந் தமது மனத்தைச் சிறிதுஞ்
செல்லவிடாராதலால், அவர்களும் விலக்கப்பட்டனர்.  "பேதைமையென்பது
மாதர்க்கு அணிகலம்," "நுண்ணறிவுடையோர் நூலொடு பழகினும்,
பெண்ணறிவென்பது பெரும்பேதைமைத்தே" என்றபடி மகளிர் இயற்கையிலும்
செயற்கையிலும் மாறாத பேதைமையுடையராதலால், அவர்கள் வருதலுந்தகாது.
"மூடன் ஊமையன் குருடன் செவிடன் கிளி கிழவன் ஸ்திரீ நோயாளிகள்
மிலேச்சன் அங்கஹீனன் இவர்கள் தாங்கள் ஆலோசிக்கிற இடத்திலிருந்தால்
துரத்திவிடவேண்டியது" என்ற மநுதர்ம சாஸ்திரமும், கம்பராமாயணத்து
யுத்தகாண்டத்தில் மந்திரப்படலத்திலே 'புனைகுழன்மகளிரோ டிளைஞர்ப்
போக்கினான், நினைவுறுகாரிய நிகழ்த்து நெஞ்சினான்' என்றதும் இங்கு
அறியற்பாலன.  'ஆப்தனாயிருந்தாலும் மூர்க்கனை ஆலோசனையினின்று
விலக்கவேண்டும்' என்றது காமந்தகமென்னும் இராசநீதிநூல்.  பிறவும்
இங்ஙனமே கண்டு கொள்க.

    ஒன்றும் முறைமை என எடுத்து, பொருத்தமான நீதி முறைமை
யெனினுமாம்.  மந்தணம் - ஆலோசனையைக் குறிக்கிற இச்சொல்
இலக்கணையால், அது செய்தற்கு உரிய இடத்துக்கு வந்தது.  தனது கருத்துக்கு
மாறுபாடாகக் கூறிய வீமன் முதலிய