பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 137

    கல்வரையும் என்பதற்குக் கற்களைக்கொண்டுள்ள என்று பொருள் கூறி,
பாலைக்கடுஞ்சுரத்துக்கு அடைமொழியாக்கி, நல்வரையும் - அழகிய
மலைகளையும் என்று உரைப்பாரு முளர்.  'நல்வரையநீர் நாடு'  என்ற
பாடத்துக்கு, அழகிய எல்லையையுடைய நீர்வளமுள்ள நாடென்க.
கானிலந்தோயாத கடவுளர்க்கெல்லாந் தலைவனான ஆதிமூர்த்தி இங்ஙனம்
கல்வரை முதலியவற்றைக் கடத்தற்குக் காரணம், காரணமின்றியெழுந்த
கருணையே யாதலால் 'சென்றருளி' என்றார்.  மூன்றாமடியில், வரை -
உயர்ந்தஇடம்.  வரைய என்பதற்கு - மலை போன்ற என்று உரைத்தால்,
'தொல்வரையஎன்பதை மதிலுக்கும் அடைமொழியாக்கலாம்.  தொன்மை -
பலநாளாகஅழிவுபடாமை.                           (115)

வேறு.

56.-இக்கவியும்,மேலைக்கவியும் - அந்நகரத்தை யடுத்துள்ள
சோலைகளின் தன்மையைக் கூறும்.

மேவு செந்துகிர்த் திரளுமா மரகதவிதமுங்
கோவை வெண்கதிர்த் தரளமுநிரைநிரை குயிற்றித்  
தாவும் வெம்பரித்தேரினான் றனக்கெதிர் சமைத்த
காவ ணங்களிற் றோன்றினபச்சிளங் கமுகம்.

     (இ -ள்.) பசு இளங் கமுகம் - (அவ்வத்தினாபுரத்தைச்சூழ்ந்த
சோலைகளிலுள்ள) பசுநிறமுள்ள இளமையான பாக்குமரங்கள்,- மேவு செம்
துகிர்திரளும் - (யாவராலும்) விரும்பப்படுகின்ற [மிக அழகிய] செந்நிறமான
பவழங்களின் தொகுதிகளையும், மா மரகதம் விதமும் - சிறந்த மரகத
மென்னும் பச்சையிரத்தினங்களின் வகைகளையும், கோவை வெள்கதிர்
தரளமும் - வடமாக அமைந்த வெண்மையான ஒளியையுடைய
முத்துக்களையும், நிரை நிரை குயிற்றி - வரிசை வரிசையாகப் பதித்து, தாவும்
வெம் பரி தேரினான் தனக்கு எதிர் சமைத்த - தாவிப்பாய்கின்ற
விரைவையுடைய குதிரைகளைப் பூட்டிய தேரின்மீது வருகிற கண்ணபிரானுக்கு
எதிரிலே (அலங்காரமாக) அமைத்து வைக்கப்பட்ட, காவணங்களின் -
பந்தல்கள்போல, தோன்றின - விளங்கிக் காணப்பட்டன; (எ - று.)

    நகரவருணனை முதலியன - பெருங்காப்பிய விலக்கணங்களின்
உறுப்பாம்.

     உவமையணி.  பாக்குமரத்திலுள்ள பழுத்த குலைகளுக்குப்
பவழத்திரளும், பச்சைக் குலைகள் பசிய இலைகள் முதலியவற்றிற்கு
மரகதவிதமும், விரிந்து தொங்கும் வெள்ளியபாளைகளுக்கு முத்துக்
கோவையும் உவமையாம்.  இடைவிடாது மேலடர்ந்து இரவியின் கதிர்கள்
நடுவில் நுழைய இடங்கொடாது நிழல்செய்தலால், பாக்கு மரச்சோலைகள்
பந்தல்போன்றன.  செயற்கைப் பந்தலில் இரத்தினங்களை அமைத்தல்,
செல்வமிக்கோர்க்கு உரியதாம்.  சிறந்த அரசர் தமது இடத்துக்கு வருகையில்
அவர்க்குப் பிற அரசர் உபசாரஞ்செய்யும் முறைப்படி கண்ணன் வருகையில்
துரியோத