வெள்ளியோ, அசைவில்விற்றொழிலும் வல்லையோவென வொரசை விலாதவனறைந்தனன். |
(இ -ள்.) (அதுகேட்டுக் கோபித்து), ஒர் அசைவு இலாதவன் - (எக்காரியத்திலும்) சிறிதுசோர்வுமில்லாத வீடுமன்,- (கன்னனை நோக்கி), 'திசைஅனைத்தினும் - எல்லாத் திக்குக்களிலும், வளைந்த - சூழ்ந்து கொண்ட,தானவரை - அசுரர்களை, இரவி வந்தது ஒரு திசையின் வாய் நிசை என -சூரியன் வந்ததொருதிக்கிலே (அவனைக் கண்ட மாத்திரத்தில் அழிகின்ற)இருள்போலாம்படி, பொருது - போர் செய்து அழித்து, வானவர்க்கு அரசுஅளித்து வந்த - (தேவலோகத்துச்சென்று அங்குள்ள) தேவர்களுக்குஅரசாட்சிச்சிறப்பைக் கொடுத்துவந்த, விறல் நீர்மையான் - வெற்றித்தன்மையுடையவனான, விசையனுக்கு - அருச் சுனனுக்கு, நிகர் - ஒப்பானவன், நீகொல் ஓ - நீதானோ? கடவுள் வெள் மதிக்கு நிகர் வெள்ளியோ -தெய்வத்தன்மையமைந்த வெண்ணிறமுள்ள பூர்ண சந்திரனுக்கு ஒப்பாகுபவன்சுக்கிரன்தானோ? அசைவு இல் வில்தொழிலும் வல்லையோ - (அவ்வருச்சுனனை நோக்குமிடத்து நீ) தளர்ச்சியில்லாத வில் வித்தையும் பயின்றவனாவாயோ?' என - என்று, அறைந்தனன் - கூறினான்; (எ - று.) அருச்சுனன் அருந்தவமியற்றிப் பரமசிவனிடத்துப் பாசுபதம் முதலிய அஸ்திரசஸ்திரங்கள் பலவற்றைப் பெற்றபின்பு, ஆங்கு வந்து அழைத்துப்போனதன்தந்தையான இந்திரனுடனே தேவலோகஞ்சேர்ந்து, அங்கு இந்திரன்முதலியதேவர்கள் வேண்டிக் கொண்டதனால், அவர்க்குப்பகைவராய்ப் பலநாளாகப்பெருந்துன்பமியற்றிவந்த கடலிடை யிலுள்ள தோயமாபுரவாசிகளானநிவாதகவசர் என்னும் அசுரர் மூன்றுகோடி பேரையும், அந்தரத்துள்ளஇரணியபுரவாசிகளான காலகேயர் என்ற அசுரர் அறுபதினாயிரவரையும்போர்செய்து அழித்து ஒழித்தானென்பது, கீழ் நிவாதகவசர் காலகேயர்வதைச்சருக்கத்து வரலாறு. தாநவரென்பதற்கு - (காசியபமுனிவரது மனைவிமார்களுள் தநு என்பவளதுமக்களென்று பொருள். ஒளியில் சந்திரனதுபெருமைக்கும் சுக்கிரனதுசிறுமைக்கும் எவ்வளவு வேறுபாடு உண்டோ, அவ்வளவு வேறுபாடுண்டு,பலபராக்கிரமங்களில் அருச்சுனனது பெருமைக்கும் கர்ணனது சிறுமைக்கும்என்பதாம். மூன்றாமடி எடுத்துக் காட்டுவமையணி. நிசையென -உவமையணி. சூரியன் உதித்தமாத்திரத்தில் இருள் இருந்த இடந் தெரியாமல்ஒழிவதுபோல, அருச்சுனன் எதிர்த்தமாத்திரத்தில் அசுரர்கள் அனைவரும்இருந்த இடந் தெரியாமல் ஒழிந்தனரென்க. நிவாதகவசர்கள் இருந்தது கீழ்கடலிலாதலால், 'இரவிவந்ததொரு திசையின் வாய்' என்பதற்கு சூரியன்உதித்தற்கு இடமான கிழக்குத்திக்கிலே என்றும் பொருள் கொள்ளலாம்.பொருது - அழித்து, காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது. மதிக்குத்தெய்வத்தன்மை - சிவபிரான் திருமுடியிலுறைதலும், திருமால்திருவுள்ளத்தினின்று உதித்தலும், தேவர்க்கெல்லாம் தனது அமிருதகிரணமளித்தலும், ஓஷதிகளெல்லாவற்றுக்குந் தலைவனாத |