பக்கம் எண் :

290பாரதம்உத்தியோக பருவம்

    "பத்துடையடியவர்க் கெளியவன் பிறர்களுக்கரிய வித்தகன்" எனப்
பெரியார் திருவாய்மலர்ந்தருளியபடி எம்பெருமானுக்கு அடியார் களிடத்துள்ள
சௌலப்பியத்தை 'அன்புடன் பணிந்த பஞ்சவர்க்காகக் கழலிணை சிவப்பேறப்
பன்னகதுவசன்மாநகர்த்தூது நடந்த நாயகன்' என்றதனாலும், எம்பெருமானது
எவரும் எளிதில் அறிதலரிய பரத்துவத்தை 'கடந்த ஞானியர் கடவுளர்
காண்கலாக்கழல்', 'தொடர்ந்த நான்மறை பின்செல' என்றவற்றாலும்
வெளியிட்டார்.  இங்ஙனம் யோகிகட்கும் பிரமனாதியோர்க்கும் வேதங்கட்கும்
எட்டாத முழுமுதற் கடவுள் வரம்பு கடந்தெழுந்த பெருங்கருணையால்
பாண்டவதூதனாய்ச் சென்றான் என்று கீழ்க் கிருட்டிணன் தூதுசருக்கத்தில்
வரலாறு கூறிவந்தபொழுது அப்பிரானிடத்து இவ்வாசிரியர்க்கு உண்டான
ஈடுபாடு அச்சருக்க முடிந்தபின்பும் ஆராது தலையெடுத்து நின்றதனால்,
அவற்றையேகுறித்து அடுத்த இச்சருக்கத்துக்குக் கடவுள்வாழ்த்துக் கூறினார்.
"பஞ்சபாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கு, மென்துணை" என்றார்,
திருமங்கையாழ்வாரும்; "பஞ்சவர்க்குத்தூதாக நடந்தவடி", "நூற்றுவர்பால்
நாற்றிசையும் போற்றப், படர்ந்தாரண முழங்கப் பஞ்சவர்க்குத் தூது,
நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே" எனச் சிலப்பதிகாரத்துக்
கூறியவாறுங் காண்க.  "பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் விரி
கமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணுந், திருவடியுங் கையும் கனிவாயுஞ்
செய்ய, கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே" "கேசவனைக்காண்க
விழி" என்றபடி கண்படைத்த பயன் எம்பெருமானது திவ்வியசொரூபத்தைக்
காணுதலேயாதலால், இங்ஙனம் கூறினார்.  கொடியவர்களையழித்து
அடியவர்களை யளித்தருளுகிற ஆதிதேவன் விஷயமான காப்புக்
கூறியதனால்,எடுத்த கருமம் இடையூறின்றி இனிது முடியு மென்பது கருத்து.
"சூடுகின்றதுழாய் முடியோன் சுரருடனே முனிவர்களுஞ் சுருதி நான்குந்,
தேடுகின்றபதஞ்சிவப்பத் திருநாடு பெறத் தூதுசெல்ல" எனக் கீழ்க்
கிருட்டிணன்தூதுசருக்கத்தில்வந்த அடிகளோடு இப்பாட்டை ஒப்பிடுக.  பின்
செல்லல் -அனுசரித்தல்; "உரலும் வேதமுந்தொடர" என்பர், மேல் ஏழாம்
போர்ச்சருக்கத்தும்.  வேதம் எப்போதும் பகவானைப் பின் தொடர்வது
என்பதுபற்றியன்றே, இப்பொழுதும் திருக்கோயில்களில் வேதபாராயணஞ்
செய்பவர் எம்பெருமானது பின்புறத்தே செல்வது.

    பஞ்சவர்க்காக ஏறச் செலத் தூதுநடந்த நாயக னென்க.  கான் -
காட்டிலும், அகம் - விராடனது வீட்டிலும் திரிந்து என, 'கானகம்' என்றதில்
அஜ்ஞாதவாசத்தையும் அடக்கலாம்.  கான் - காமியம், துவைதம் முதுலியன.
'அன்பென்பது - தான் கருதப்பட்ட பொருளின்கண் தோன்றும் வேட்கை'
என்பர் நக்கீரர்.  'அன்புடன் என்ற விடத்து, 'உடன்' என்னும் மூன்றனுருபு
அடைமொழிப் பொருளது: அன்புடையராய்ப் பணிந்த என்க.  பஞ்சவர் -
ஐவர்; இங்கே பாண்டவர்களைக் குறித்ததனால், தொகைக்குறிப்பு. 
ஞானமாவது- பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத
ஐயங்களாலன்றிஉண்மையால் அறியும் மெய்யுணர்வு.  கடந்த என்பதை