பக்கம் எண் :

334பாரதம்உத்தியோக பருவம்

யிலகுசக்கரசிகரிசுற்றடியெனவளைப்பனவெழுபெயர்க்
குலமுகிற்றலைகிழியவைப்பனகுரவிதத்தனபுரவியே.

     (இ -ள்.) புரவி - குதிரைகள்,- பல வகைப் படு கவனம் - அநேக
வகைப்பட்ட நடைகளையுடைய, மெய் கதி - இலக்கணந்தவறாத விரைந்த
நடையாலே, பவனம் ஒப்பன - காற்றை ஒத்திருப்பன; பரவை சூழ் உலகு
அனைத்தையும் - கடல் சூழ்ந்த பூலோகம் முழுவதையும், வெளியில்
உய்த்தலின் - (தம்கால்களால் எழுப்பப்படும் துகள்கள் மூலமாக)
ஆகாயத்தில்செலுத்துதலால், உரகருக்கும் ஒர் உதவி ஆய் - (கீழிருந்து
நிலத்தைத்தாங்கும்) நாகர்களுக்கும் (தலைப்பாரத்தைக் குறைத்து) ஒப்பற்ற
உதவியாகி,இலகு சக்கர சிகரி - (உலகத்தைச் சூழ்ந்து) விளங்குகின்ற
சக்கரவாளகிரியை,சுற்று அடி என - (தாம் வட்டமாக ஓடுதற்கு அளவாக
அமைத்த) சுற்றெல்லையென்னும்படி, வளைப்பன - மண்டலகதியாய்ச் சுற்றி
வருவன, எழு பெயர்குலமுகில் தலை கிழிய வைப்பன -ஏழு
பெயர்களையுடைய சிறந்தமேகங்களின் தலை கிழியும்படி (அவற்றின்மேல்)
வைப்பனவான, குரம்விதத்தன - காற்குளம்புகளின் வகையையுடையன;
(எ - று.)

    பலவகைப்படு கவனம் - ஐவகைநடை; அவை - "விக்கிதம் வற்கிதம்
வெல்லுமுபகண்டம், மத்திமஞ் சாரியோடைந்து" என்பன.  இவற்றுள்,
நிச்சலமாக அதிவேகமும் அதிமந்தமுமாகாமல் சமமான கதி - விக்கிதம்;
அதனினும் அதிகமாய்ச் சதுரமான கதி - வற்கிதம்; தாளகதியுடன் வட்ட
மிட்டகதி - வெல்லுமுபகண்டம்; வேகத்தினால் முன்னங்கால்களைத் தூக்கி
வரும்நடை - மத்திமம்; அவ்வளவு வேகமாகவுஞ் சமமாகவும் போகுகை -
சாரி.இவை பஞ்சகதி யெனவும், பஞ்சதாரை யெனவும் படும்:  இனி,
மல்லகதி,மயூரகதி, வியாக்கிரகதி, வானரகதி, ருஷபகதி எனவுமாம்.  இனி
இவற்றோடுபஞ்சளி, முரளி, சுடாலம், வலனம் என்னும் நான்குங் கூட்டி
நவகதிகூறுதலுமுண்டு.   ஒருதவியாய் - சிறிது உதவியாய் என்றுமாம்.
பூமியைச்சூழ்ந்துள்ள கடலைச் சுற்றிலும் கோட்டை மதில்போல்
வளைந்துள்ளதொருபெருமலைக்குச் சக்கரவாள மென்றுபெயர்.  சக்கரம்போல
வட்டவடிவாகவுள்ளமையால், சக்கரவாள மெனப்படும்.  சர்ப்பராசனான ஆதி
சேஷனும்அவற்குத் துணையாக அஷ்டமகாநாகங்களும் கீழுலகத்திலிருந்து
தம்தலைகளால் பூமியைப் பரிக்கின்றன வென்பது நூன் மரபு.  குலம் முகில்
தலை- கூட்டமான மேகங்களினிடம் என்றுமாம்.  குரவிதம் என்றது, இங்கே
முன்னிரண்டு கால்களை.  இப்பாட்டில் தற்குறிப்பேற்றவணியும்,
தொடர்புயர்வுநவிற்சியணியும் விரவி வந்தன.  சக்கரவாளகிரி உட்பக்கம் சூரிய
கிரணங்களால் விளங்கியும் வெளிப்பக்கம் அவற்றால் விளங்காமலும்
'லோகாலோகம்' எனப் பெயர் பெறுந்தன்மை தோன்ற, 'இலகு சக்கரசிகரி'
என்றார்.  'சக்கர சிகரி சுற்றடியென வளைப்பன' என்பதற்கு கடல் சூழ்ந்த
பூமிமுழுவதையும் மிகவிரைவிற் சூழ்ந்துவரவல்லனவென்பது தேர்ந்தகருத்து;
'புவனதலமுற்றுமுடன் வளையவொ ரிமைப்பொழுதில் வருவன'