பக்கம் எண் :

அபிதானசூசிகையகராதி 365

திருதராட்டிரன் -  கண்ணிலாவரசன்,சதுரங்கசேனையினன், உலூக-
                5:  பின்புத்திக்காரன், சஞ்-15: கரவுறையும் மனத்தன்,
                 கிருட்-8: அருளிலி, கிருட்-14:
                அம்பிகையென்பவளின்மகன்,கிருட்-211;
                 கயம்படுமனத்தன்,முகூர்-1.

திரௌபதி    -  கனலிற்றோன்றியவள், உலூக- 18:  தீண்டாதகற்புடைய
                செழுந்திரு, கிருட்-24:ஏத்தரிய பெருங்கற்பினள்,
                கிருட்-48: பெண்ணீர்மைகுன்றாப்பெருந்திரு, கிருட்-51

துச்சாதனன்
-புயவலியால்  மாதைவிரிதுகிலுரிந்தவன், கிருட்-175. 

துரியோதனன் -[சுயோதனன்] யுதிட்டிரனைச்சூதினால்வென்று
               பல்லாண்டடிப்படவாண்டவன், உலூக-3:
               அரவவெங்கொடியோன், உலூக-8: குருகுலத்தவன்,
               உலூக-13:  கல்வி தூய நெஞ்சிலாதவன்.  உலூக-14:
              சித்தசித்துணர்விலாதான், வாசு-7: பராசரன் குலத்தினன்,
               சஞ்-9: பாண்டவரின் உரிமைகவர்ந்தவன், கிருட்-14:
               கோடுகின்ற மொழியவன், கிருட்-19: திரௌபதிக்கு
               மாசளித்தவன்,கிருட்-45: மல்வரையதோளான், கிருட்-
              55: வலம்புரித்தாரவன், கிருட்-73: முறைமைமாறினவன்,
              கிருட்-104:  இராசராசன்,கிருட்-105:  பொய்வளர்ந்த
              மொழிமன்னன், கிருட்-120:நாசமுறுபேரன், கிருட்-134:
              கடியவன், கிருட்-183:நாகவிடம் நிகர்மனத்தினான்,
              கிருட்-190:  மறலியெனத்தகுபவன், கிருட்-191:
              வஞ்சகன், கிருட்-192:கர்ணனுக்குக்கைவருந்துணைவன்,
               கிருட்-261:  வான்வணங்கினும்வணங்கலாமுடியினான்,
               படை-9: சதமகற்குவமைசாலும்தரணிபன், படை-23.

துரியோதனனுக்குத்
துணையாய் வந்தவரிற் சிலர்
- விந்தரன்,விந்தன்,சோமதத்தன், கௌசிகன்,
                           போசன், ஆதிகேகயன்,திகத்தபூபன்,
                            கவுடராசன்,மாளவன், சோழன், சேரன்,
                            ஓக நீகன், நாராயணகோபாலர்
                            பதினாறாயிரவர், பூரிச்ரவசு,கௌரிமா,
                            துச்சாதனன் முதலாய தம்பியர்
                            தொண்ணூற்றொன்பதின்மர், விகத்தசேனன்,
                            பகதத்தன்முதலியோராவர், படை -17-22:
                            துன்மருடன், கிருதவன்மா, சயத்திரதன்,
                            அணி-19.

துருபதன் -பாஞ்சாலராசன், யாகசேனன்எனப்படுவன், திரௌபதியின் தந்தை,
          படை-3.

துருவாசமுனிவன் -குந்திதேவி  கன்னியாயிருந்த காலத்து அவளுக்கு
                  ஐந்துமந்திரம் உபதேசித்துப்
                  புத்திரபாக்கியத்தைப்பெறுமாறுகூறிப்போனவன்,
                  கிருட் - 152, 220.

துரோணன் -வேதியர்கோன்,  உலூக-7:பரத்துவாசகுமாரன், உலூக-15:
             சுருதியா லுயர்ந்தவன், கிருட்-100.

துரௌபதர் -[த்ரௌபதேயக்]  -திரௌபதியிடம் தோன்றிய
           ஐவர் மகார்; உபபாண்டவர்எனப்படுவர்:  அவர்கள்
           பெயர் - விந்தன், சோமன்,வீரகீர்த்தி, புண்டலன்,
           செயசேனன், படை-5.

துவரை - துவாரகை;கண்ணனது  இராசதானியானஊர், உலூக -
        5: வாசு-3: வைகுண்டநகரம்பூமியில் வந்தது போன்றது,
        வாசு-7.

நகுலன் -அக்கினயெனத் தக்க  திறலுடையன்,கிருட் - 219:
        பாண்டவசேனைக்குக்கால்போன்றவன், அணி - 16.

பட்டவர்த்தனன் -  மகுடவர்த்தனனுக்குமேற்பட்டவன்: [மகுட