பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன369

ஆநிரை - பசுக்கூட்டம்; உலூக - 19
ஆயிரநாமம் - ஸஹஸ்ரநாமம், கிருட் - 213
ஆயோதனம் - போர், கிருட் - 226
ஆர்தல் - பொருந்துதல், கிருட் - 25, நிறைதல், கிருட் - 71
ஆரணன் - பிரமரூபி, கிருட் - 209
ஆலவட்டம் - பெருவிசிறி, கிருட்-101
ஆலோசனைச்சபையில் வரத்தகாதவர்கள், கிருட்-52
ஆவணம்-கடைவீதி, கிருட்-64
ஆவது - நன்மையாகுங் காரியம், கிருட்-142
ஆழி - சக்கரப்படை, வாசு - 15: கடல், கிருட்-1, 226
ஆழியான் - கண்ணபிரான், கிருட்-151
ஆறிருநாமத்தோன் - கண்ணபிரான், வாசு-20
ஆறு-வகை, கிருட் - 36
ஆறுவகைச்சேனை, படை-17
ஆனனம்-முகம், அணி-16
ஆனா-நீங்காத, கிருட்-225
இகல்-வலிமை, கிருட்-35
இகலுதல்-பகைத்தல், கிருட்-99
இசை-ஸ்வரம், கிருட்-105;கீர்த்தி, கிருட்-130
இசைகொள்வேய், கிருட்-105
இசைக்கும்-உவமவுருபு, கிருட்-69
இசைத்தல்-சொல்லுதல், ஒலித்தல், கிருட்-69
இடத்தல்-(கோட்டாற்) குத்தியெடுத்தல், கிருட்-59
இணை-இரண்டு, கிருட்-37,78,238
இதயத்திண்மை - மனவுறுதி. தைரியம், கிருட்-218
இதயம் கரிது, உலூக-4
இதம்படல்-இனிமை பொருந்தல், கிருட்-95
இந்தனம் - விறகு, கிருட்-146
இந்திரன்கிழக்குத்திக்குப்பாலகன், கிருட்-184
இந்திரன் மலைகளின் சிறகறுத்தமை, கிருட்-195
இந்து-சந்திரன், கிருட்-248
இபம்-யானை, அணி-10
இம்பர்-இவ்வுலகம், கிருட்-137
இமிர்தல்-ஒலித்தல், கிருட்-182
இமைப்பிலார் - தேவர்கள், கிருட்-83
இயந்திரஎகினம் - ஹம்ஸயந்திரம், முகூர்-4
இயம்-வாத்தியம், கிருட்-72
இயல்-தன்மை, கிருட்-167
இயைபுத்தொடை, கிருட்-66
இரட்ட-வீச, கிருட்-54, 84
இரட்டி-இரண்டு மடங்கு, கிருட்- 181
இரவி-சூரியன், கிருட்-99, 138, 139
இரவிசிறுவன்-கர்ணன், கிருட்-139
இரவு-இரத்தல், கிருட்-15, 83
இராசமண்டலங்கள்-அரசர் கூட்டங்கள், படை-23
இரு-பெரிய, கிருட்-171, 237
இருக்கை-இருப்பிடம், கிருட்-188
இல்-வீடு, கிருட்-107, 108
இல்லாதவர்-ஏழை, கிருட்-235
இலக்கு-இலட்சியம், குறி, கிருட்- 244
இலஞ்சி-நீர்நிலை, உலூக-11
இவுளி-குதிரை, அணி-7
இளி-இழிவு, கிருட்-123
இளைஞர்-சிறியோர், கிருட்-175
இளைத்தல்-பின்னிடைதல், கிருட்-  9, 13
இளையாள்-திருமகள்; திரௌபதிக்கு உவமையாகுபெயர்,கிருட்-48
இறுத்தல்-தங்குதல், கிருட்-70
இறுதல்-ஒழிதல், கிருட்-192
இன்னே-இப்பொழுதே, கிருட்- 234
இனைதல் - சோகித்தல், கிருட்- 262
ஈட்டம்-கூட்டம், கிருட்-65
ஈண்டுதல்-கூடுதல், படை-19
ஈர்தல்-அறுத்தல், கிருட்-195