ஈரம்-அன்பு, சஞ்-17 ஈறிலா உலகு - முத்தியுலகம், சஞ்-8 ஈனம்-குறைவு, கிருட்-29 உகண்டு-துள்ளி, கிருட்-94 உகளுதல்-துள்ளுதல், கிருட்-5, 23 உகிரிழந்தவெம்புலி, [உகிர்-நகம்], உலூக-17 உகுதல்-பெருகுதல், சஞ்-16 உட்குதல்-அஞ்சுதல், கிருட்-193, அணி-12 உடற்றல்-போர்செய்தல், உலூக-15 உடுபதம்-நக்ஷத்திர மண்டலம், கிருட்-60 உத்தமோசா, படை-3 உத்திரம்-விட்டம், கிருட்-102 உதணம் - அலகில்லா அம்பு; மொட்டம்பு, கிருட்-204 உததி-கடல், சஞ்-3; அணி-30 உதயராகம், கிருட்-185 உதாமன்-யுதாமந்யு, படை-3 உதாரசீலன் - கர்ணன், கிருட்- 134 உந்தி-நாபி, கிருட்-110 உந்துதல்-தள்ளுதல், கிருட்-161 உம்பர்-தேவர், கிருட்-57; மேலிடம், தேவலோகம், கிருட்-137 உம்பர்கா - தேவலோகத்துக் கற்பகச்சோலை, கிருட்-157 உம்பர்கா அனைய கையான் - கர்ணன், கிருட்-157 உம்பர்நாயகன் - கண்ணபிரான், கிருட்-57 உய்தல்-பிழைத்துவாழ்தல், கிருட்- 33 உய்வு - தப்பிப்பிழைத்தல், கிருட்-162 உயர்வுநவிற்சியணி, கிருட்-58 உயவி-ஆலோசித்து, சஞ்-2 உரகபுங்கவன்-ஆதிசேடன், கிருட்-90 உரகம்-பாம்பு, கிருட்-90 உரகர்-நாகர், படை-21, அணி-6 உரம்-வலிமை, உலூக-15, கிருட்- 33, 223; மார்பு-வாசு - 11, கிருட்-196, 20 7 உரவோன் - வலிமையுடையோன் கிருட்-223 உரிதல்-களைதல், கிருட்-24, 28 உரிமை-உரிய இராச்சிய பாகம், கிருட்-111 உருத்தல்-கோபங்கொள்ளல், கிருட்-5 உரும்-இடி, சஞ் - 13-47; கிருட்-115 உருமு துவசன்-இந்திரன் [உருமு- இடி], அணி-28 உருவகவணி, கிருட்-50, 165 'உரைத்தும்' என்னும் உத்தி, கிருட்-108 உரைதவிர்த்தல் - பேச்சை யடக்குதல், கிருட்-53 உலகநவிற்சியணி, கிருட்-80 உலகெலாம் உதவும் உந்தியான் - கண்ணபிரான், கிருட்-115 உலூகம்-குதிரை, உலூக-5 உலூகலம்-உரல், உலூக-5 உலைக்கனலன்ன பிள்ளைகள், சஞ்- 3 உவமையணி, உலூக - 17, கிருட்- 56, 148, 163, 164, 166 உவர்நிலம் - களர்நிலம், கிருட்- 25 உழக்குதல் - கலக்குதல், கிருட்- 93 உழி-இடம், கிருட்-172, 245, படை-13 உழை-பக்கம், இடம், சஞ்-14; மான், கிருட்-167 உழைமுதல் எழுப்புவன இசை, அணி - 27 உள்-உள்ளிடம்; மனத்திற்கு இடவாகுபெயர், சஞ்-18 உள்ளவர்-செல்வர்கள், கிருட்- 235 உள்ளுதல்-தியானித்தல், கிருட்-79 உளம் கருகுதல்-மனம் வெதும்புதல், கிருட்-106 உற்பலம்-கருங்குவளை, வாசு-9 உற்பவன்-சன்மம், பிறப்பு, சஞ்-7 உற்றபகை-மிக்கபகையாளி, கிருட்-127 உறவு-பந்துத்துவம், கிருட்-156 |