பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன371

உறவு கூர்தல்-உறவுகொண்டாடுதல், கிருட்-104
உறுகணை-அடைந்துள்ள நாகாஸ்திரம், கிருட்-259
உறுதிகள்-நன்மைதருவன, உலூக- 16; கிருட்-17, 158, 236
உறைதல்-வசித்தல், பொருந்துதல், கிருட்-149
உன்னுதல்-எண்ணுதல், ஆலோசித்தல், கிருட்-108
ஊடு-இடையிலே, சஞ்-16
ஊர்கோள்-மண்டலம், கிருட்-226
ஊர்தி-வாகனம், கிருட்-22
ஊனம்-குற்றம், கிருட்-12
எகினம்-அன்னம், முகூர்-4
எஞ்சுதல்-உயிரொடுங்குதல், கிருட்-3, 216
எடுத்துக்காட்டுவமையணி, கிருட்- 122, 171
எண்-அளவு, கிருட்-131, ஆலோசனை, கிருட்-172
எண்குன்றம்-அஷ்டகுலபர்வதங்கள், கிருட்- 203
எண்மை-எளியது, கிருட்-246
எதிர்ந்தோர்-போரில்எதிரிட்டவர், கிருட்-23
எதிரெதிர்மயங்கல், கிருட்-63
எதுநாள்-எத்தனைநாள், அணி-31
எயில்-மதில், கிருட்-70
எயினர்-வேடர்கள், கிருட்-171
எரி-அக்கினி தேவன், கிருட்-158
எல்-பகல், கிருட்-179
எழில்-அழகு, வாசு-6, கிருட்-54, 97
எழிலி-மேகம், வாசு-6, சஞ்-13, படை-13
எழு-தூண், அணி-25
எழுந்தருள்-புறப்பட்டுச் செல்வாய், சஞ்-18
எழுபார்-ஏழுதீவுகளாகவுள்ள பூமி; கிருட்-26, அணி-26
எழுபுலி-ஏழுதீவுகளாகவுள்ள பூமி, கிருட்-118
எழுபெயர்க்குலமுகில்-சப்தமேகம், அணி-8
எற்றுதல்-தாக்குதல், கிருட்-68,
உதைத்துத் தள்ளுதல், கிருட்-203
என்பு-எலும்பு, கிருட்-197, 250
என்று-சூரியன், [எல்-ஒளி] கிருட்-262
எனதாய்-எத்தன்மையதாய், அணி 30
ஏ-அம்பு, கிருட்-122
ஏகாந்தம்-இரகசியமான இடம், கிருட்-255
ஏத்துதல்-புகழ்தல், கிருட்-61
ஏதி-ஆயுதம், அணி-21
ஏதிலார்-அயலார், கிருட்-111
ஏதுத்தற்குறிப்பேற்றவணி, கிருட்- 85, 183; அணி-29
ஏதுத்தற்குறிப்பேற்றவுவமையணி, கிருட்-89
ஏய்தல்-பொருந்துதல்,எழுந்தருளல், கிருட்-105
ஏழ்நரகு, சஞ்-11
ஏற்றம்-உயர்வு, கிருட்-254
ஏறு-ஆண்சிங்கம், கிருட்-17, 34
ஏனம்-பன்றி, உலூக-1
ஏனல்-தினைப்பயிர், கிருட்-2
ஐந்தலைநாகம், கிருட்-162
ஐயநிலையுவமையணி, கிருட்-62
ஐயவுவமையணி, கிருட்-80
ஐயிருநாமத்தோன்-அருச்சுனன், வாசு-20
ஒசித்தல்-முறித்தல், சஞ்-19, கிருட்-11
ஒட்டர்-ஒட்ரதேசத்தரசர், படை-6
ஒட்டுதல்-சபதஞ்செய்தல், படை-3
ஒத்துதல்-அழுத்துதல், தாள அடைவுபடல், கிருட்-201
ஒப்பனை-அலங்காரம், கிருட்-71
ஒல்லை-விரைவு [இடைச்சொல்], கிருட்-215
ஒவ்வுதல்-உடன்பாடாதல், கிருட்-18
ஒழி - துணிவுப் பொருளுணர்த்துவது, கிருட்-40