பக்கம் எண் :

372அரும்பதவகராதி முதலியன

ஒன்றுதல் - பொருந்துதல், கிருட்-40
ஒன்னலர்-பகைவர், சஞ்-16
ஒக்கும்-தகும், கிருட்-262
ஓதனம்-அன்னம், கிருட்-127
ஓதை-ஓசை, கிருட்-168
ஓதையமர்தல்-ஓசையடங்குதல், கிருட்-168
ஓம்-அங்கீகாரப் பொருளை யுணர்த்தும்
வடமொழியிடைச்சொல், கிருட்-40
ஓருழைசார்தல்-பட்சபாதமாதல், சஞ்-14
ஓலை-திருமுகம், படை-14
ஓவல்-ஒழிதல், கிருட்-104
ஓவலின்றி-சும்மா இராமல், கிருட்-104
ககனம்-ஆகாயம், கிருட்-166, 191, 197, அணி-11
கங்குல்-இராத்திரி, கிருட்-97
கங்கை திருமாலின் காலினின்று பெருகுதல், கிருட்-91
கங்கைநீர்நுரை x நரைத்த வெண்மயிர், கிருட்-238
கஞ்சுகம்-கவசம், கிருட்-85
கட்டுரை-உறுதிமொழி, உலூக-3; வாசு-19
கடம்-கன்னம்; மதநீருக்கு இடவாகுபெயர், அணி-14
கடலாடை அவனி, கிருட்-8
கடவ நாள்-கடமைப்பட்டனவான நாள்கள், கிருட்-92
கடவுட்குலவரசன்-இந்திரன்,  கிருட்-230
கடவுதல் - ஏறிச்செல்லுதல், கிருட்-196
கடவுள்-தெய்வத்தன்மை, சஞ்-13; கிருட்-15, 138
கடவுளர்-தேவர்கள், கிருட்-196
கடன்-கடமை, கிருட்-86, 253
கடாவுதல்-செலுத்தல், கிருட்-136
கடி-ஒலி, அணி-27
கடிகை-நாழிகை, கிருட்-181
கடுங்கதை-கொடிய கதாயுதம், சஞ்-15
கடுப்ப - ஒப்ப, கிருட்-58
கடைத்தலை-வாயிற்புறம், கிருட்- 253
கடைநிலம்-இறுதியிடம், கிருட்-18
கடைப்பிடிகருமம்-உறுதியாகக் கொண்டசெயல், கிருட்-261
கண் - தன்மை, அடிக்கப்படும் இடம், படை-11
கண்களால் அருந்துதல், கிருட்-79
கண்சிவத்தல், கோபக்குறி, கிருட்- 126
கண்பரப்பல்-நன்றாகப் பார்த்தல், கிருட்-104
கண்மலர்பரப்புதல்- குளிரப்பார்த்தல், கிருட்-75
கண்வளர்தல்-துயிலுதல், கிருட்-96
கணம்-கூட்டம், அணி-6
கணிகை-வேசை, கிருட்-97
கணிகைமாதர்-வேசைமகளிர், கிருட்-165
கணையம்-வளைதடி, கிருட்-205
கதம்-உக்கிரம், வலிமை, அணி-23
கதிரவன்-சூரியன், கிருட்-153
கதிரைத்திங்கள் ஒன்றிய பகல்- அமாவாசை, முகூர்-4
கதுமென-விரைவாக[இடைச்சொல்], கிருட்-12
கதுவுதல்-பற்றுதல், கிருட்-146
கந்தடுகளிறு, கிருட்-188
கந்தம்-பரிமளம், கிருட்-105
கந்து-கட்டுத்தறி, கிருட்-82
கமடம்-ஆமை, உலூக-1
கமலாசனி-திருமகள், கிருட்-209
கமுகம் x காவணம், கிருட்-56
கயம்-கயமை, கீழ்மை, முகூர்-1
கயிரவம்-ஆம்பல்மலர், கிருட்-6, செவ்வல்லி, 165
கர்ணனை  அர்த்தரதனாகவைத்ததற்குக் காரணம், அணி-20, உரை
கரடம்-மதஜலம், கிருட்-122
கரவு-வஞ்சனை, கிருட்-8
கரி-சாட்சி, கிருட்-224