பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன373

கரியமாமுகில்-கிருஷ்ணன், உலூக 2
கருடக்கொடியோன்-திருமால்,கண்ணபிரான், கிருட்-197
கருத்துடையடைகொளியணி, கிருட்-93
கருதலர்-பகைவர், கிருட்-46
கரும்பொழுது-இராப்பொழுது, கிருட்-171
கருமம்-தொழில், கிருட்-171
கருவிளைமலர், கிருட்-167
கல்லினால் வருகல்முகில் விலக்கிய கரியமாமுகில்- கண்ணபிரான், உலூக-2
கவந்தம்-உடற்குறை, சஞ்-16
கவரி-சாமரம், கிருட்-54, 101
கவனம்-குதிரையின் நடை, கதி, அணி-8
கவி-குரங்கு, கிருட்-200
கவிக்கு இறை-சுக்கிரீவன் [கவி- குரங்கு], கிருட்-197
கவிகை-குடை, கிருட் 227
கவின-விளங்க, களப்-8
கழி-மிகுதி (உரிச்சொல்), கிருட்-174
கழை-மூங்கில்; வேய்ங் குழலினிசைக்குஇருமடியாகுபெயர், கிருட்-221
களவேள்வி, சஞ்-17
களாசி-படிக்கம்; தாம்பூலம் முதலியவைஏந்தும் ஒருவகைப் பாத்திரம்,
  கிருட்-101
கறங்குதல்-ஒலித்தல், கிருட்-89
கற்பகம்-கல்பகமரம், கிருட்-137
கற்பகமும் நாணவண்மையிலுயர்ந்தவன்-கர்ணன், கிருட்-137
கற்பாந்த திவசம்-கல்பகாலத்தின் முடிவுநாள், கிருட்-234
கறி-கறியமுது, கிருட்-83
கறுத்தவர்-கோபித்தவர், பகைவர், கிருட்-241
கறை-உரல், அணி-6
கன்றுதல்-கோபித்தல், [கன்று சினம்-மிக்ககோபம்], கிருட்-52
கன்னி - மணமாகாத இளமகள், கிருட்-152
கனகப்பூங்கா-கற்பகச்சோலை, கிருட்-38
கனகம்-பொன், கிருட்-38, 102
கனகன்-இரணியன், கிருட்-43
கனலுதல்-கோபித்தல், கிருட்-177
கா-சோலை, கிருட்-185
காங்கெயன்-கங்காபுத்தரனாகிய வீடுமன், உலூக-17
காத்தல்-தடுத்தல், கிருட்-35, மறைத்து வைத்தல், கிருட்-261
காமபாலன்-பலராமன், கிருஷ்ணனது தமையன், உலூக-3
காமர்-அழகிய, கிருட்-195
காமன்-மன்மதன், கிருட்-185
கால்-காற்று, கிருட்-61
காவணம்-பந்தல், கிருட்-56
காவி-நீலோற்பலமலர், கிருட்-167
கிடங்கு-அகழி, கிருட்-59
கிளர்தல்-விளங்குதல், கிருட்-84
கிளைஞர்-உறவினர், கிருட்-8, 95
கிரௌஞ்சமலை துளைபட்டமை, கிருட்-196
கீழ்த்திசை-கிழக்குத்திக்கு, கிருட்-99
குஞ்சரம்-யானை, கிருட்-122
குடதிசை-மேற்குத்திக்கு, கிருட்-85
குடில்-குடிசை, கிருட்-80
குடை-ஆளுகை, கிருட்-20, 28
குந்தம்-எறியீட்டி, கிருட்-199; கைவேல், கிருட்-205
குந்துதல்-உட்காருதல், கிருட்-161, 199
கும்பம்-குடம்; பூர்ண கும்பம், கிருட்-166
குமுதம்-ஆம்பல், கிருட்-97
குயிற்றுதல்-பதித்தல், அமையச்செய்தல், கிருட்-56
குரங்குத்துவசம் உடையவன் அருச்சுனன், கிருட்-234