பக்கம் எண் :

374அரும்பதவகராதி முதலியன

குரம் - குதிரையின் காற்குளம்பு, அணி-7
குரவர்-பெரியோர், கிருட்-109
குரிசில்-ஆண்பாற்சிறப்புப்பெயர், கிருட்-78, 247; படை-24
குருகுலத்துமுதல்வன்-புரூரவன், கிருட்-28
குருநிலம்-குருக்ஷேத்திரம், கிருட்-120
குரை-ஒலிக்கின்ற, அணி-24
குலகிரி ஏழு, படை-22
குலம்-கூட்டம், கிருட்-116
குவடு-சிகரம், கிருட்-194
குழல்களைதல்-கூந்தலையரிதல்; கூந்தலைக் கூட்டி முடித்தல்
  எனினுமாம், கிருட்-35
குழிபறித்தல் - பள்ளந்தோண்டுதல், கிருட்-179
குறள்-வாமனவடிவம், உலூக-142
குனித்தல்-வளைத்தல், உலூக-16
குனிவு-வளைவு, அணி-9
கூர்தல்-மிகுதல், கிருட்-75
கூனல்-வளைவு, உலூக-1
கெழு-விளங்குகிற, கிருட்-96
கெழுமுதல்-கலந்து ஒருமித்தல், கிருட்-112
கேசரி-ஆண்சிங்கம், கிருட்-84
கேசரித்தவிசு-சிங்காதனம், கிருட்-84
கேசவன்-கண்ணபிரான், கிருட்-84, 247
கேண்மை-அன்பு, கிருட்-247; சிநேகதருமம் [சமாதான வழி], படை-10
கேண்மோ, மோ-முன்னிலையசை, கிருட்-232
கேதனம்-கொடி, உலூக, 6,7,20
கேது-கொடி, வாசு-2
கேவலம்-சிறுமை, கிருட்-26
கேள்வன்-கணவன், கிருட்-110
கேள்விப்பயன்-தத்துவப்பொருள், கிருட்-147
கையமைத்தல்-(போதுமென்று)கையாற்குறிப்புக்காட்டுதல், கிருட்-30
கையறைதல்-கையடித்துத்தரல், கிருட்-122
கைவரல்-பயின்று பழகிவரல், கிருட்-261
கைவழங்குதல் - கைதட்டிக்கொடுத்தல்; சபதம் செய்யுமாறு இது, கிருட்-120
கொங்கை-தனம், கிருட்-252
கொடிநிரைக்கு அலை வரிசையுவமை, கிருட்-61
கொடிப்படை-முன்னணிச்சேனை, அணி-30
கொண்டல்வாகனன்-இந்திரன்,கிருட்-243; [கொண்டல்-மேகம்]
  கொந்து-கொத்து [மெலித்தல் விகாரம்], கிருட்-31, 156
கொல்லத்தகாதவர் இன்னாரெனல், கிருட்-173
கொழு-காறு, கலப்பை முனை, கிருட்-50
கொற்றம்-வெற்றி, கிருட்-82
கோகனதம்-தாமரை, கிருட்-78
கோடு-வளைவு, உலூக-16; சங்கம்- கிருட்-78
கோடுதல்-நீதிதவறுதல், மாறுபடுதல், கிருட்-19
கோது-குற்றம், கிருட்-111
கோமளம்-அழகு, கிருட்-102
கோயில்-அரண்மனை, கிருட்-68
கோலம்-வராகம், பன்றி, கிருட்- 59, அழகு, கிருட்-125, 243
கோலுதல்-வளைதல், அகப்படச்செய்தல், கிருட்-178
கோவியர்-இடைப்பெண்கள், வாசு-1, கிருட்-121
கோவிலங்கு-சிங்கம், கிருட்-122
கோறல்-கொல்லுதல், கிருட்-173, கொல்லாதே,
  [எதிர்மறையேவல்], கிருட்-258
சக்கரப்பொருப்பு-சக்கரவாளமலை, கிருட்-60
சகடம்-சகடாசுரன், கிருட்-32
சகோரம்-ஒருபறவை விசேடம்;