இது நிலவை உணவாகக் கொள்ளும், கிருட்-167 சங்கவண்ணன்-பலராமன், வாசு-19 சண்டம்-உக்கிரம், கிருட்-47; பயங்கரம், கிருட்-202 சத்திரம்-தாமரை, கிருட்-97 சதம்-நூறு, அணி-13 சதமகன்-இந்திரன், படை-23 சதிப்பது-வஞ்சனையாகவெல்வது, கிருட்-178 சதி-தாளவகை, அணி-13 சந்தம்-அழகு, கிருட்-132, 236 சந்திரன்-சந்திரகலை, மூக்கின் இடப்பக்கச் சுவாசம், வாசு-8 சந்திரனைக்கண்டு கடல் பொங்குதல், கிருட்-248 சந்து-சமாதானம், கிருட்-6, 41 சமயாதிபர்-மதத்தலைவர், கிருட்-235 சமர்-போர், கிருட்-93 சமரதர், அணி-1 சமைத்தல்-அமைத்து வைத்தல், கிருட்-56 சரதம்-உண்மை, அணி-7 சராசரங்களுக்கு எல்லாம்தாய் குந்தி, கிருட்-260 சராசரம்-இயங்குதிணைப்பொருள் நிலைத்திணைப்பொருள், சஞ்-9, கிருட்-260 சருகாதல்-உலர்ந்து போதல், கிருட்-126 சரோருக சதனம் - தாமரையிலை, வாசு-2 சல்லரி-ஒருவாத்திய விசேடம், கிருட்-54 சற்பதலம்-பாதாளலோகம் [சற்பம்-பாம்பு], கிருட்-194 சற்பம்-பாம்பு, வாசு-9 சாகம்-இலை, கிருட்-8 சாதுரங்கம்-சதுரங்கசேனை, நால்வகைப்படை, படை-14 சாந்து-சந்தனமரம், கிருட்-161 சாபம்-வில், சபித்தல், கிருட்-228 சாமபேததானதண்டம், கிருட்-2 சாமம்-பகைவரிடம் இன்சொற் சொல்லல், கிருட்-2 சால-மிக, கிருட்-125 சாலும்-அமையும், சஞ்-16 சிகரி-மலை, அணி-8 சித்-உணர்வுடையது, ஆத்மா, வாசு-7 சிந்து-கடல், கிருட்-248, படை-23 சிந்துரம்-யானை, கிருட்-11, 203 சிந்தூரம்-ஒருவகைச் செம்பொடி, கிருட்-11 சிலேடையணி, கிருட்-50 சிலிஷ்டரூபகம், கிருட்-86, 87 சிலேடையுவமையணி, கிருட்-97, 185 சிலை-தநுர்மாசம், மார்கழி, முகூர்-4 சிலையின் ஆண்மை-வில்லின் திறமை, கிருட்-136 சிவபிரானின் இரவொழித்தது, கிருட்-83 சிறை-காவல், உலூக-18; இறகு, கிருட்-69; சீர்-தன்மை, கிருட்- 103 சுடிகை-உச்சிக்கொண்டை; தலை, கிருட்-119, 184, 193, 197 சுண்ணம்-வாசனைப்பொடி, கிருட்-84 சுதன்-மகன், வாசு-2, கிருட்-74, 154 சுயோதனன்-துரியோதனன், உலூக-1; கிருட்-1 சுயோதனாதியர் பூமிக்குப்பாரம், சஞ்-17 சுரதரு-கற்பகவிருட்சம், கிருட்-21 சுரபதி-இந்திரன், கிருட்-244 சுரிகை-உடைவாள், கிருட்-205 சுருதி-வேதம், கிருட்-80 சுரும்பு-வண்டு, கிருட்-71 சுற்றடி-கற்றெல்லை, அணி-8 சுற்றம் கெடும்- சொல்நிலைக்கேற்பச் செய்யுமென் முற்றைக்கொண்டது, உலூக-14 சீதம்-குளிர்ச்சி, கிருட்-110 |