ரியர், இற்றைக்கு நூற்றுநாற்பத்தேழு வருடங்களின்முன் இருந்தவர். இதுதவிர, இற்றைக்கு 200-வருடங்களின்முன் இருந்த அஷ்டாவதானம் - அரங்கநாதகவிராயர் பாடிய பாரதத்தின் பிற்பகுதியும் ஒன்று உளது; அது, ஏறக்குறைய 2500 - செய்யுளுடையது. இனி, மாவிந்தம் என்னும் பெயரால் தமிழில் பாரதக் கதையைச் சொல்லும் ஒருநூலுண்டு என்றும் கூறுப: மற்றும், பழைய காஞ்சிப்புராண ஆசிரியர் ஒரு பாரதத்தை இயற்றியுள்ளாரென்று அப்புராணச் சிறப்புப்பாயிரம் தெரிவிக்கின்றதென்றும் அந்நூல் இப்போது கிடைக்கவில்லையென்றும் கூறுப. இவர் மகாபாரதமொன்றுதவிர வேறுநூலெதுவும் பாடியிருப்பதாகக் தெரியவரவில்லை. இவர் தமது நூலிற் பெரும்பாலும் வடமொழிகளைத் தனி மொழியாகவும் தொடர்மொழியாகவும் இன்னமொழியின் சம்பந்தமானதென்று எளிதில் தெரியவொண்ணாதபடி திரித்தும் மொழிபெயர்த்தும் உபயோகித்திருத்தலால், வடமொழியிலும் மிகவல்லவரென நன்குவிளங்குகின்றது. தமிழில் எந்த நூலாசிரியரும்வடமொழிகளை இவரளவு எடுத்துக்கொள்ளவில்லை. வடசொற்களைத்தமிழ்க்காப்பியத்தில் நுழைக்கிற வழக்கம் இவர்காலந் தொடங்கித்தான்அதிகமாயிருத்தல்வேண்டும். இவர் பாடல்களில்-உவமை, உருவகம்,எடுத்துக்காட்டுவமை, தற்குறிப்பேற்றம், வேற்றுப்பொருள்வைப்பு, பிறிதுமொழிதல்,உயர்வுநவிற்சி முதலிய பொருளணிகள் அமைந்திருப்பது மாத்திரமே யன்றி, மடக்கு[யமகம்], பிராசம் முதலிய சொல்லணிகளும் ஆங்காங்கு அமைந்திருத்தலையும்,இவரது செய்யுள்நடை பலவிடத்து முடுகுதலுடையதாதலையும், பலவகைச்சந்தங்கள்சந்தப்போலிகள் வண்ணங்கள் பொருந்தியிருத்தலையும், யுத்தவருணனை எல்லாநூல்களினும் இந்நூலிற் சிறத்தலையும் காணலாம். வில்லிபுத்தூரார் பாரதம் வில்லிபுத்தூராருடைய பாரதம் என்று விரியும்: வில்லிபுத்தூராரியற்றிய பாரதம் என்க:தொக்குநின்ற ஆறுாம்வேற்றுமை, செய்யுட்கிழமைப் பொருளது. பாரதம் என்னுஞ்சொல்லுக்கு - பரதனது வம்சத்தைப்பற்றிய நூலென்றுபொருள். இங்குக் குறித்தபரதனென்பவன் - சந்திரவமிசத்தில் துஷ்யந்தமகாராசனுக்குச் சகுந்தலையினிடந்தோன்றிப் பிரசித்திபெற்ற ஓரரசன். பரதவம்சத்துத்தோன்றினவர், பாரதர்; (அவராவார்- பாண்டவரும், துரியோதனாதியரும்.) அவர்களது சரித்திரத்தை உணர்த்தும் நூல்பாரதமெனப்பட்டது; இது -வடமொழித்தத்திதாந்த நாமம். இனி, வருணாச்சிரமதருமம்இராசதருமம் மோட்சதருமம் நீதிமுதலிய சிறந்த உறுதிப்பொருள்களை யெல்லாம்அறிவிப்பதனால் முனிவர்கள் சீர்தூக்கிப் பார்க்குமிடத்து மற்றையெல்லா நூல்களினும்மிகுந்த பாரம் [அதாவது - மகிமை] உடைமைபற்றி, |